நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
சொர்ணகடேஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
தேவாரம் பாடல் பெற்ற நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
ஊர்: | நெய்வனை |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெண்ணையப்பர், சொர்ணகடேஸ்வரர் |
தாயார்: | நீலமலர்க்கண்ணம்மை |
தல விருட்சம்: | புன்னை |
தீர்த்தம்: | பெண்ணை நதி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
அமைவிடம்தொகு
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ள ஏ. குமாரமங்கலத்திற்கு வடக்கில் 7 கிமீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையத்திலிருந்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவிலும் நெய்வணை உள்ளது.[2]
இறைவன், இறைவிதொகு
இத்தலத்தின் மூலவர் சொர்ணகடேஸ்வரர், தாயார் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் புன்னை மரமாகும்.
அமைப்புதொகு
கோயில் வளாகத்திற்கு முன்பாக பலி பீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. முன் மண்டபத்தில் சந்திரன், சூரியன், நவக்கிரகம், பைரவர், நந்தி, பலி பீடம் காணப்படுகின்றன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னதி, லட்சுமி நாராயணர் சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, படிகலிங்க சன்னதி ஆகியவை உள்ளன. இடப்புறம் இறைவி சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கா, பிரம்மா உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
குடமுழுக்குதொகு
26 மே 2010இல் குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெட்டு உள்ளது.
மேற்கோள்கள்தொகு
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல் 298. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.