நெய்வேலி வானூர்தி நிலையம்

தமிழ்நாட்டிலுள்ள வானூர்தி நிலையம்

கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில், பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை புனரமைத்து மீண்டும் சேவை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

நெய்வேலி விமான நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்என்.எல்.சி இந்தியாலி மிடெட்
சேவை புரிவதுநெய்வேலி, கடலூர், தமிழ்நாடு
அமைவிடம்என்.எல்.சி இந்தியா
உயரம் AMSL184 ft / 56 m
ஆள்கூறுகள்11°36′49″N 079°31′35″E / 11.61361°N 79.52639°E / 11.61361; 79.52639
நிலப்படம்
NVY is located in தமிழ் நாடு
NVY
NVY
தமிழ்நாடு வரைபடத்தில் நெய்வேலி வானூர்தி நிலையம்
NVY is located in இந்தியா
NVY
NVY
NVY (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
05/23 3,937 1,200 தார் சாலை

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகளில் கூடுதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை பணி அமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான நிலையத்தில், மீண்டும் விமான போக்குவரத்து பணிகள் துவங்கியுள்ளது.[சான்று தேவை]