நெல்லி அகினியன்

ஆர்மீனிய சதுரங்க வீரர்

நெல்லி அகினியன் (Nelly Aginian) என்பவர் ஆர்மீனியா நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு ஆகத்து 4 அன்று பிறந்தார்.

நெல்லி அகினியன்
Nelly Aginian
நெல்லி அகினியன், எராகிளியான் 2007
முழுப் பெயர்Նելլի Աղինյան
நாடுஆர்மீனியா
பிறப்புஆகத்து 4, 1981 (1981-08-04) (அகவை 42)
ஏரவன்
பட்டம்பெண்கள் அனைத்துலக சதுரங்க மாசுட்டர் (2001)
பெண் கிராண்டு மாசுட்டர் (2005)
பிடே தரவுகோள்2207 (சூன் 2018)
உச்சத் தரவுகோள்2380 (ஏப்ரல் 2005)

சதுரங்க வாழ்க்கை தொகு

2001 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண் அணைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற தலைப்பையும் 2005 ஆம் ஆண்டில் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்தையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டு அலுசுட்டா நகரில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்கப் போட்டியில் அகினியன் முதலாவது இடத்தைப் பிடித்தார்[1]. இவர் மைக்கா ஏரவான் சதுரங்க கழகத்தின் உறுப்பினர் ஆவார். 2006 ஆம் ஆண்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை சதுரங்கப் போட்டியில் இவர் அங்கம் வகித்த கழகம் போட்டியில் வென்றது[2]. 2003 ஆம் ஆண்டு பல்கேரியாவின் பிளோவிடிவ் நகரில் நடைபெற்ற 5 ஆவது ஐரோப்பிய அணி சதுரங்க சாம்பியன்பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆர்மீனிய மகளிர் குழுவில் அகினியன் இடம்பெற்றிருந்தார்.[3].

இந்த அணியே இப்பட்டத்தை வென்ற முதலாவது ஆர்மீனிய மகளிர் அணியாகும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய அணி சதுரங்க சாம்பியன்பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றபோதும் இவர் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் [4]. 2005, 2009, 2011 ஆம் ஆண்டுகளிலும் இவர் அங்கம் வகித்த ஆர்மீனியாவின் மகளிர் அணி பங்கு பெற்று விளையாடியது. இவ்வாண்டுகளில் இவர்கள் பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

2007, 2009, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெண்கள் அணிகளுக்கு இடையிலான உலக சதுரங்க போட்டிகளில் அகினியன் மூன்று முறையும் பங்கேற்று விளையாடினார் "World Women's Team Chess Championship: Nelly Aginian". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 28 June 2018.</ref>

பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஆர்மீனியாவின் சார்பாக அகினியன் இதுவரை ஏழுமுறை பங்கேற்று விளையாடியுள்ளார். (1996, 1998, 2000, 2004, 2006, 2008 மற்றும் 2010) 33 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 34 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 36 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 37 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 38 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு, 39 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் அகினியன் பங்கேற்ற ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன [5].

மேற்கோள்கள் தொகு

  1. "Tournament report January 2005: Autumn-2004-2 Intl". FIDE. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
  2. "11th European Chess Club Cup (women): Fügen 2006". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
  3. "5th European Team Chess Championship (women), Plovdiv 2003, Armenia". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
  4. "5th European Team Chess Championship (women), Plovdiv 2003, Armenia". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
  5. "Women's Chess Olympiads: Nelly Aginian". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 28 June 2018.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லி_அகினியன்&oldid=3857688" இலிருந்து மீள்விக்கப்பட்டது