நெல்லி படுகொலை

நெல்லி படுகொலை 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 காலையில் இருந்து தொடர்ந்து ஆறு மணி நேரம் மத்திய அசாமில் நடந்தது. இந்த படுகொலையில் அலிசிங்கா, குலபதர், பசுந்தாரி, புக்தூபா பீல், புகுபாபா ஹபி, போர்ஜோலா, புட்டூனி, டோங்காபோரி, இந்தூர்மரி, மாடி பர்பத், முலதாரி, மாத்தி பர்பத் எண். 8, சில்பெட்டா, போர்பூரி மற்றும் நெல்லி, நகாமோ என்று 14 கிராமங்களைச் சேர்ந்த 2,191 நபர்கள் உயிரிழந்தனர். (அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விவரங்கள்படி 10,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்) [1] [2] [3] இந்த படுகொலைகளில் பலியானவர்கள் கிழக்கு வங்கத்திலிருந்து (இன்றைய வங்காளதேசம்) குடியேறிய முஸ்லிம்கள். [4]

நெல்லி படுகொலை
Assam is located in இந்தியா
Assam
Assam
Assam (இந்தியா)
இடம்அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°06′41″N 92°19′02″E / 26.111483°N 92.317253°E / 26.111483; 92.317253
நாள்18 பிப்ரவரி 1983
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காள முஸ்லிம்கள்
தாக்குதல்
வகை
வலுக்கட்டாயமாக வெளியேற்றம், கூட்டு படுகொலைகள்
இறப்பு(கள்)2,191+
தாக்கியோர்பூர்வ அசாமிய மக்களை சேர்ந்த கும்பல்

இந்த படுகொலையின் சாட்சியாளராக இந்தியன் எக்ஸ்பிரஸின் ஹேமேந்திர நாராயண், அசாம் ட்ரிப்யூனின் பெடாபிரதா லஹ்கர் மற்றும் ஏபிசியின் சர்மா ஆகிய மூன்று ஊடகப் பணியாளர்கள் இருந்தனர். [5]

பின்னணிதொகு

நெல்லியில் பூர்வீகவாசிகள் நடத்திய இந்தப் படுகொலையில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகள் நடத்தினர். இந்தப் படுகொலை நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது 1983 ஆம் ஆண்டில் மாநிலத்தில் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வங்களாதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 4 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார். இந்த நடவடிக்கையால் கோபமுற்ற அசாமின் பூர்வீகவாசிகள், முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையை செய்தனர்.[2] இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்ற மிக மோசமான படுகொலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தப் படுகொலை பற்றி பொது சேவை ஒலிபரப்பு அறக்கட்டளை வாட் தி ஃபில்ட்ஸ் ரிமெம்பர் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விசாரணைதொகு

நெல்லி படுகொலை தொடர்பான அதிகாரபூர்வ விசாரணையை திவாரி கமிஷன் அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்றுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இரகசியமாக உள்ளது (மூன்று பிரதிகள் மட்டுமே உள்ளன).[2] 600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1984 ஆம் ஆண்டில் அசாம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு ( ஹிடேஸ்வர் சைக்கியா தலைமையில்) இதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்த முடிவை காங்கிரசுக்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் பின்பற்றின. [6] அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மற்றவர்களும் திவாரி கமிஷன் அறிக்கையை பகிரங்கப்படுத்த சட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி வழங்கப்படும் என்று நம்புகின்றனர். [7]

காவல்துறை 688 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். ஆனால் அவற்றில் 378 வழக்குகள் "ஆதாரங்கள் இல்லாததால்" மூடப்பட்டன. மேலும் 310 வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன. இருப்பினும், இந்த வழக்குகள் அனைத்தும் 1985 அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசால் கைவிடப்பட்டது. இதன் விளைவாக படுகொலையில் ஈடுபட்ட ஒரு நபர் கூட தண்டனை பெறவில்லை.

பிரதமர் ராஜீவ் காந்தி 1985 ஆம் ஆண்டில் அசாம் போராட்டத்தை முறையாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர்களுடன் அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். [8]

குறிப்புகள்தொகு

  1. Genesis of nellie massacre and assam agitation, Indilens news team, Retrieved 10 November 2015.
  2. 2.0 2.1 2.2 "83 polls were a mistake: KPS Gill". Assam Tribune. 18 February 2008. 7 February 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. Rehman, Teresa (2006-09-30), "Nellie Revisited: The Horror's Nagging Shadow", Tehelka, 11 November 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2008-02-19 அன்று பார்க்கப்பட்டது
  4. Kimura, Makiko (2013), "The Nellie Massacre", in Meghna Guhathakurta; Willem van Schendel (eds.), The Bangladesh Reader: History, Culture, Politics, Duke University Press, p. 481, ISBN 0-8223-5318-0: "In this incident, the local people, including the Assamese and tribes... attacked the Muslim immigrants from East Bengal."
  5. Main Uddin. "Genesis of nellie massacre and assam agitation". 5 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. Rehman, Teresa. "An Untold Shame". Tehelka Magazine. 11 November 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Flashback to Nellie Horror:AUDF to move court for probe report". 19 February 2008. Archived from the original on 8 செப்டம்பர் 2018. https://web.archive.org/web/20180908092722/https://www.telegraphindia.com/1080219/jsp/guwahati/story_8920369.jsp. பார்த்த நாள்: 10 October 2012. 
  8. "Tripartite talks to review the implementation of the Assam Accord held in New Delhi on 31.05.2000". SATP. 2 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லி_படுகொலை&oldid=3640552" இருந்து மீள்விக்கப்பட்டது