நெல் ஆய்வு நிலையம், அம்பாசமுத்திரம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 13 நிறுவனங்களில் ஒன்று அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் (Rice Research Station, Ambasamudram)[1] ஆகும். நெல் ஆராய்ச்சிக்கென்று ஆரம்பிக்கப்பட்ட நிலையங்களில் இது மூன்றாவதாக கருதப்படுகிறது. இது பேராசிரியர் மற்றும் தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது[2].

இது மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தின் நெல் சாகுபடியில் ஏற்படும் இன்னல்களைக் களைய 1937-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் (SH-178) உள்ளது[2] [3]

விவசாயப் பட்டயப்படிப்பு

தொகு

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை மையத்தில் பட்டயப்படிப்பு (Diploma in Agriculture Sciences, DSc., (Agri)) கற்பிக்கப்படு்கிறது. இது தமிழ் நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் பட்டயப்படிப்பு கற்பிக்கப்படும் ஆறு வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். மற்ற ஐந்து நிலையங்களாவன: வேளாண்மை எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம் (திண்டிவனம்), வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (கோவில்பட்டி), வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் (பவானிசாகர்), தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் (பேச்சிப்பாறை) மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் (அருப்புக்கோட்டை)

இரகங்கள் வெளியீடு

தொகு

கடந்த 70 வருடங்களில் 20 இரகங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 1986 இல் வெளியிடப்பட்ட ஏஎஸ்டி 16[2] இன்றும் விவசாயிகளால் விரும்பி பயிடப்படும் ஒரு இரகமாகும்

விருதுகள்

தொகு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1996 ஆம் ஆண்டு சிறந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-02-03.
  2. 2.0 2.1 2.2 2.3 http://agritech.tnau.ac.in/rs_map/rs_ambasamudram.html
  3. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_ambasamudram.html