நேகா கிர்பால்

நேகா கிர்பால் (Neha Kirpal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக தொழிலதிபர் ஆவார். கலை மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பாக பணிபுரிந்ததற்காக இவர் அறியப்படுகிறார். 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பன்னாட்டு கலை கண்காட்சியான இந்தியக் கலைக் கண்காட்சியை நிறுவிய இவர்,[1][2] அதை பத்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினார். 2019 ஆம் ஆண்டில், மருத்துவர் அமித் மாலிக் என்பவருடன் "இன்னர் அவர்" என்ற நிறுவனத்தில் இணை நிறுவனராக சேர்ந்தார். இது தொழில்நுட்ப தலைமையிலான மனநலங்களுக்கானத் தளமாகும். பலவிதமான மனநல நிலைமைகளுக்கு சர்வ சாதாரண தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இவ்வமைப்பு வழங்குகிறது. தற்பொழுது மனநல அமைப்பான அமாகாவின் இணை நிறுவனர் ஆகவும் உள்ளார்.[3]

நேகா கிர்பால்
Neha Kirpal
பிறப்புபுது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சீமாட்டி சிறீ ராம் கல்லூரி
இலண்டன் கலைப் பல்கலைக்கழகம்
பணிசமுகத் தொழில் முனைவோர்
அறியப்படுவதுஇந்திய கலைக் கண்காட்சி, அமகா ஆரோக்கியம் இணை நிறுவனர்
விருதுகள்நாரி சக்தி விருது, இந்திய அரசு (2015), இளம் உலகளாவிய தலைவர், உலகப் பொருளாதார மன்றம் (2015)

இந்திய அரசு பெண்களுக்காக வழங்கும் இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருதான நாரி சக்தி புரசுகார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நேகா கிர்பால் இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை தில்லியில் கழித்தார். சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றார்.[5] பின்னர் தில்லியில் உள்ள லேடி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் பயின்றார்.[6] தனது பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஆண்டுகளில் இளைஞர்களிடையே இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்துடன் சேர்ந்து ஈடுபட்டார்.[7] இலண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6][8]

தொழில்

தொகு

நேகா கிர்பால் 2008 ஆம் ஆண்டில் இந்திய கலை கண்காட்சியை (முன்னர் இந்திய கலை உச்சி மாநாடு) நிறுவினார். இந்த கண்காட்சி சமகால கலையில் கவனம் செலுத்துவதற்காக அறியப்படுகிறது.[9][10] இந்தியாவில் கலைச் சந்தையை புதுப்பித்த பெருமை இவருக்கு உரியதாகும். [1] ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இந்நிறுவனத்தின் 10% பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டு பதவி விலகல் செய்தார்.[11] ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தனது கலை வணிகத்தை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட எம்.சி.எச் என்ற பன்னாட்டு குழுமத்திற்கு விற்றார்..[12][13]

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் கலைக்கான தேசிய ஆலோசனைக் குழுவில் இவர் பணியாற்றினார்.[14]

2019 ஆம் ஆண்டில் நேகா கிர்பால் அமித் மாலிக்குடன் அமகா ஆரோக்கியம் அமைப்பில் சேர்ந்தார். அமகா ஆரோக்கியம் என்பது இந்தியா முழுவதும் சிகிச்சையை வழங்கும் ஒரு மனநல அமைப்பு ஆகும்.[3][15][16]

2024 ஆம் ஆண்டில் இவர் மருத்துவர் நந்தினி முரளியுடன் இணைந்து "மனநலம்: பின்னடைவு மற்றும் நம்பிக்கையின் வாழ்க்கை அனுபவங்கள் என்ற நூலின் இணை ஆசிரியராக இருந்தார்.[17]

விருதுகள்

தொகு

2012 ஆம் ஆண்டில் இந்தியா டுடேயின் 25 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் நேகா கிர்பால் சேர்க்கப்பட்டார்.[18]

2014 ஆம் ஆண்டில் இந்தியா டுடே வழங்கும் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் விருதைப் பெற்றார்.

பிசினசு டுடே பத்திரிக்கை இவரை 2012-14 ஆம் ஆண்டிற்கான "வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்" என்று அறிவித்தது.[19][20][21]

2014 ஆம் ஆண்டில் போர்ப்சு இந்தியா வழங்கிய கலை விருதுகளில் கிர்பால் ஆண்டின் சிறந்த கலைத் தொழிலதிபராக இருந்தார்.[22]

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் இந்தியா 40 வயதுக்குட்பட்ட 40 பேர்கள் என்ற பட்டியலில் இவரை பட்டியலிட்டது.

2015 ஆம் ஆண்டில் இவருக்கு நாரி சக்தி புரசுகார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியது. மேலும் இவ்விருது பன்னாட்டு மகளிர் தினத்தன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சியால் இவருக்கு வழங்கப்பட்டது.[4]

இதே ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தால் இந்தியாவில் இருந்து இளம் உலகத் தலைவராகப் இவர் பெயரிடப்பட்டார். என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் 2015 ஆம் ஆண்டுக்கான இந்தியர் என்ற விருதை இவருக்கு வழங்கியது.[23] [24]

2017 ஆம் ஆண்டில் நேகா கிர்பால் அப்பல்லோ பத்திரிகையின் "40 அண்டர் 40 குளோபல்" என்று இவரை பட்டியலிட்டது.[25]

மனிதநேய ஆய்வுகளுக்கான ஆசுபென் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.[26] 2018 ஆம் ஆண்டில் இவர் சுதந்திரமான பாரபட்சமற்ற சர்வதேச தலைமை அமைப்பில் ஐசனோவரின் புதிய கண்டுபிடிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலின சமத்துவத்தை மேம்படுத்திய ஈடுபாடுகளுக்காக 2024 ஆம் ஆண்டில் எதிர்காலப் பெண் முற்போக்குவாதி என்ற பட்டத்தை சி.என்.பி.சி செய்தி தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது.[27][28]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mishra, Arunima (August 31, 2014). "Neha Kirpal is behind the revival of Indian art market". Business Today. https://www.businesstoday.in/magazine/cover-story/story/indian-art-market-neha-kirpal-united-art-fair-136919-2014-08-23. 
  2. Tripathi, Shailaja (February 9, 2013). "A fair share". The Hindu இம் மூலத்தில் இருந்து December 9, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131209103737/http://www.thehindu.com/features/friday-review/art/a-fair-share/article4199996.ece#selection-561.0-566.0. 
  3. 3.0 3.1 Ashrafi, Md Salman (January 9, 2024). "Mental health startup Amaha raises $4.4 Mn in Series A". Entrackr. https://entrackr.com/2024/01/exclusive-mental-health-startup-amaha-raises-4-4-mn-in-series-a/. 
  4. 4.0 4.1 Jain, Shantanu (March 10, 2015). "Neha Kirpal, Director, India Art Fair receives Nari Shakti Award from the President". Business World. https://everythingexperiential.businessworld.in/article/Neha-Kirpal-Director-India-Art-Fair-receives-Nari-Shakti-Award-from-the-President/10-03-2015-102792/. 
  5. Sethi, Sunil (January 22, 2016). "Lunch with BS: Neha Kirpal". Business Standard. https://www.business-standard.com/article/opinion/lunch-with-bs-neha-kirpal-116012201583_1.html. 
  6. 6.0 6.1 Singh, Shalini (December 25, 2016). "Empress of art". The Week. https://www.theweek.in/theweek/cover/neha-kirpal.html. 
  7. Parul (January 21, 2011). "Bringing art home". India Today. https://www.indiatoday.in/magazine/supplement/story/20110124-snapshots-745532-2011-01-13. 
  8. "Neha Kirpal". asia.wowawards.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  9. East, Ben (January 31, 2013). "The India Art Fair attracts 1,000 artists from around the world". The National (Abu Dhabi). https://www.thenationalnews.com/arts-culture/art/the-india-art-fair-attracts-1000-artists-from-around-the-world-1.256176. 
  10. Punj, Shweta (October 14, 2012). "Neha Kirpal is riding high on the success of India Art Fair". Business Today. https://www.businesstoday.in/magazine/special/story/neha-kirpal-most-powerful-women-in-business-32151-2012-09-27. 
  11. Shaw, Anny (August 18, 2017). "India Art Fair gets new director for tenth edition". The Art Newspaper. https://www.theartnewspaper.com/2017/08/17/india-art-fair-gets-new-director-for-tenth-edition. 
  12. Kuruvilla, Elizabeth (September 13, 2016). "Art Basel parent company co-owns India Art Fair". Livemint. https://www.livemint.com/Leisure/iif1FLz950ml3lTrjfH67N/Art-Basel-India-Art-Fair-tieup-augurs-well-for-South-Asia.html. 
  13. Kalra, Vandana (April 24, 2022). "As India Art Fair returns, a brief history of art fairs and their significance". Indian Express. https://indianexpress.com/article/explained/explained-india-art-fair-history-significance-7884786/. 
  14. "Neha Kirpal | Art Business Conference" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  15. "Mind over art". Mumbai Mirror. April 6, 2020. https://mumbaimirror.indiatimes.com/opinion/the-informer/hello-123-testing/articleshow/75001406.cms. 
  16. "'There is mental illness in every home today,' says co-founder of a mental health startup". CNBC TV18. February 10, 2024. https://www.cnbctv18.com/news/there-is-mental-illness-in-every-home-today-says-co-founder-of-a-mental-health-startup-19024391.htm. 
  17. "Westland Books Acquires Neha Kirpal And Dr Nandini Murali’s Latest Book On Mental Health". OneIndia. 2 June 2024. https://www.oneindia.com/india/westland-books-acquires-neha-kirpal-and-dr-nandini-murali-s-latest-book-mental-health-3839759.html. 
  18. "25 power women and their inspiring stories". India Today. March 31, 2012. https://www.indiatoday.in/magazine/supplement/story/20120319-25-most-influential-women-vidya-balan-kareena-kapoor-757654-2012-03-08. 
  19. "Most Powerful Women in Business 2012". Business Today. September 20, 2012. https://www.businesstoday.in/in-the-news/photo/25-powerful-women-in-india-4576-2012-09-20-8. 
  20. "Most Powerful Women in Business 2013". Business Today]]. August 27, 2013. https://www.businesstoday.in/in-the-news/photo/most-powerful-women-in-business-in-india-2013-4655-2013-08-2-25. 
  21. "Most Powerful Women in Business 2014". Business Today. August 11, 2014. https://www.businesstoday.in/specials/most-powerful-businesswomen-2014/video/most-powerful-women-in-indian-business-neha-kirpal-8302-2014-08-11. 
  22. "Winners For 2014". Forbes India. 2014. https://www.forbesindia.com/awards/artawards/winners.html. 
  23. "World Economic Forum names Smriti Irani as Young Global Leader from India". The Economic Times. March 17, 2015. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/world-economic-forum-names-smriti-irani-as-young-global-leader-from-india/articleshow/46596921.cms. 
  24. "Art Isn't Just For the Elite, Says Neha Kirpal". NDTV. February 2, 2016. https://www.ndtv.com/video/news/indian-of-the-year/art-isn-t-just-for-the-elite-says-neha-kirpal-401929. 
  25. "40 Under 40 Global". Apollo. September 7, 2017. https://www.apollo-magazine.com/neha-kirpal-apollo-40-under-40-global-the-business/. 
  26. "Kamalnayan Bajaj Fellows".
  27. "Eisenhower Fellowships Welcomes 21 Innovators from Around the World". Eisenhower Fellowships. September 24, 2018. https://www.efworld.org/eisenhower-fellowships-welcomes-21-innovators-from-around-the-world/. 
  28. "A list of all the women felicitated at the launch event". CNBC-TV18. February 10, 2024. https://www.cnbctv18.com/photos/india/future-female-forward-season-2-a-list-of-all-the-women-felicitated-at-the-launch-event-19024501.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_கிர்பால்&oldid=4148038" இலிருந்து மீள்விக்கப்பட்டது