நேகா சிங் இரத்தோர்

நேகா சிங் இரத்தோர் (Neha Singh Rathore) என்பவர் நாட்டுப்புற பாடகி. பணவீக்கம், ஊழல், ஏழ்மை மற்றும் அரசாங்கத்தின் தோல்விகள் ஆகியவற்றைப் பாடல்கள் மூலம் கேள்விகள் மற்றும் நையாண்டி செய்பவர் ஆவார். இவர் பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசிப்பவர். நேகா சிங் இரத்தோர் பாடல்களான பீகார் மே கா பா?, யு. பொ. மீ கா பா? மற்றும் யு. பி. மீ கா பா? இரண்டாம் பாகம் அதிக கவனத்தினை ஈர்த்தன. இவர் போச்புரி மொழியில் பாடுகிறார்.[1][2][3]

நேகா சிங் இரத்தோர்
Neha Singh Rathore
இயற்பெயர்நேகா சிங் இரத்தோர்
பிறப்பு1997
கைமூர், பீகார், இந்தியா
பிறப்பிடம்கைமூர்
இசை வடிவங்கள்போச்புரி கிராமியப் பாடகர்
தொழில்(கள்)கிராமியப் பாடகர்
இசைத்துறையில்5 ஆண்டுகள்
வெளியீட்டு நிறுவனங்கள்NSR
இணையதளம்

இளமை தொகு

நேகா சிங் இரத்தோர் 1997ஆம் ஆண்டு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். நேகாவின் நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான "அலகாபாத் பல்கலைக்கழகத்தில்" பாடலாக்கப்பட்டு மக்களிடம் சென்றபோது சர்ச்சையில் சிக்கினார். இதன் பிறகு "ரோஜ்கர் தேபா கி கர்பா டிராமா" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் யூடியூப்பில் பிரபலமானது. மேலும் இந்த பாடல் பீகார் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது.[4][5]

சர்ச்சை தொகு

நேகா சிங் இரத்தோர் கொரோனா காலத்தில் யோகி அரசை உ. பி. மீ கா பா என்று பாடி சர்ச்சையில் சிக்கினார். இதன் மூலம், இவர் கொரோனா கால அமைப்பு, ஹாத்ராஸ் சம்பவம் போன்ற கடுமையான பிரச்சினைகளை எழுப்பினார்.[6]

நேகா சிங் இரத்தோர் தனது யு. பி. மெய்ன் கா பா? கான்பூர் தேஹாத்தில் தீட்சித குடும்ப சம்பவத்தை நையாண்டி செய்து பாகம் 2-ல் பாடினார். இதையடுத்து இவரிடம் காவலர் ஆட்சேபனை கடிதத்தினை வழங்கினர்.[7][8][9][10]

மேற்கோள்கள் தொகு

  1. News Desk, Harraiya Times (2023-02-08). "नेहा सिंह राठौर (Bhojpuri Singer) जीवन परिचय". Harraiya Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  2. Times, Hindustan (2023-02-08). "Who is 'UP Mein Ka Ba' fame Neha Singh Rathore?". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  3. Today, India (2023-02-08). "UP Me Ka Ba? Who's singer Neha Rathore facing the music of UP Police". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  4. News Desk, Harraiya Times (2023-02-08). "नेहा सिंह राठौर (Bhojpuri Singer) जीवन परिचय". Harraiya Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  5. Roy, Divyanshu Dutta (2023-02-08). "Cops' Notice To Singer Over Song Taunting Yogi Government, Bulldozer Move". NDTV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  6. bharat, enav (2022-01-17). "नेहा ने अब गाया- 'यूपी में का बा.. मंत्री के बेटवा बड़ी रंगदार बा.. किसानन के छाती पर रौंदत मोटर कार बा..'". Navbharat (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. Tak, Aaj (2023-02-22). "एक गाना और 7 सवाल 'यूपी में का बा' की सिंगर नेहा सिंह राठौर से पुलिस ने किन-किन बातों पर मांगा जवाब". Aajtak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  8. Ujala, Amar (2023-02-22). "Akhilesh Yadav: नेहा सिंह राठौर को नोटिस दिए जाने पर अखिलेश यादव का तंज, यूपी में झुठ्ठे केसों की बहार बा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  9. Jagran, Dainik (2023-02-22). "Neha Singh Rathore यूपी में का बा गाने वाली नेहा सिंह राठौर को पुलिस ने द‍िया नोटिस". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  10. Now, Mirror (2023-02-22). "Bhojpuri singer Neha Singh Rathore receives notice for her song 'UP Mein Ka Ba' mocking Yogi govt". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_சிங்_இரத்தோர்&oldid=3671875" இலிருந்து மீள்விக்கப்பட்டது