நேசனல் ஹெரால்டு
நேசனல் ஹெரால்டு (National Herald) எனும் ஆங்கில நாளிதழை, இந்திய விடுதலை இயக்கத்திற்காக, இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக இருந்த ஜவகர்லால் நேரு 9 செப்டம்பர் 1938 அன்று லக்னோவில் நிறுவினார். [4] இதன் உருது மொழி பதிப்பு குவாமி ஆவாஸ் எ னும் பெயரிலும், இந்தி மொழி பதிப்பு நவஜீவன் எனும் பெயரில் வெளி வந்தது.
Freedom is in Peril, Defend it with All Your Might | |
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட்[1], Shiva Publications |
நிறுவுனர்(கள்) | ஜவகர்லால் நேரு |
ஆசிரியர் | ஜாபர் ஆகா [2] |
நிறுவியது | 9 செப்டம்பர் 1938 |
மொழி | ஆங்கிலம் |
மீள் ஆரம்பம் | 01 சூன் 2017 |
தலைமையகம் | புது தில்லி |
சகோதர செய்தித்தாள்கள் | குவாமி ஆவாஸ் (உருது) மற்றும் நவஜீவன் (இந்தி[3] |
இணையத்தளம் | www |
நாடு | இந்தியா |
நகரம் | புது தில்லி மற்றும் லக்னோ |
1942-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்நாளிதழை பிரித்தானிய இந்தியா அரசு தடை செய்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்நாளிதழ் 2008 முதல் நிதிச்சுமையால் தற்காலிகமாக வெளியிட்டை நிறுத்தி வைத்தது. [5]இந்நாளிதழின் உரிமையாளர்களான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர் 2016-இல் நேசனல் ஹெரால்டு நாளிதழை மீண்டும் வெளியிட்டனர். [6]பின்னர் 2017-இல் இந்நாளிதழை நடத்தி வந்த அசோசியேட்டட் நிறுவனத்தை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்தினர் விலைக்கு வாங்கி, நேசனல் ஹெரால்டு நாளிதழை நடத்தினர்.
நேசனல் ஹெரால்டு வழக்குகள்
தொகு2017 முதல் பல்வேறு வழக்குகளால், இந்நாளிதழ் நிறுத்தப்பட்டு, மின் நாளிதழாக வெளி வருகிறது.[7] நேசனல் ஹேரால்டு நாளிதழை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2,000 கோடி எனும் நிலையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இந்நிறுவனம் ரூ 90.25 கோடி கடன் நிலுவை வைத்திருந்தது.
இந்நிலையில் யங் இந்தியா எனும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ள சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ரூபாய் 50 இலட்சம் செலுத்தி, மோசடியாக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்திய வழக்கை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சந்தித்து வருகின்றனர். [8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Court dismisses Swamy’s plea in National Herald case
- ↑ https://www.nationalheraldindia.com/about-us
- ↑ https://www.nationalheraldindia.com/about-us
- ↑ "National Herald shuts down after 70 years". Archived from the original on 31 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
- ↑ Nehru’s paper, The National Herald, may close
- ↑ Congress set to revive National Herald newspaper after 8-year break
- ↑ National Herald e-Paper
- ↑ நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு பின்னடைவு
- ↑ நேஷனல் ஹெரால்டு வழக்கு