நேதாஜி பவன்

நினைவு இல்லம்

நேதாஜி பவன் (Netaji Bhawan) என்பது கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசியவாதி "நேதாஜி" சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கைக்கான நினைவு மற்றும் ஆராய்ச்சி மையமாக பராமரிக்கப்படும் ஒரு கட்டிடமாகும். [1]

நேதாஜி பவனம்
Map
அமைவிடம்லாலா லஜபத் ராய் (எல்ஜின்) சரணி, சிறீபள்ளி, போவானிபூர், கொல்கத்தா, இந்தியா
நேதாஜி பவன், கொல்கத்தா
பவனின் நுழைவு
நேதாஜி சுபாஷ் போஸின் தந்தை ஜே.என் போஸ் (ஜனகிநாத் போஸ்) பெயரில் பளிங்கு தகடு

1909 ஆம் ஆண்டில் போஸின் தந்தையால் கட்டப்பட்ட இந்த வீடு, [2] நேதாஜி ஆராய்ச்சி பணியகத்திற்கு சொந்தமானதாகும். இந்த கட்டிடம் மேற்படி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மேலும் இது ஒரு அருங்காட்சியகம், காப்பகங்கள் மற்றும் நூலகத்தை உள்ளடக்கியது. இந்த பணியகத்தை சுகதா போஸ் மற்றும் அவரது தாயார் கிருஷ்ணா போஸ் ஆகியோர் நடத்துகின்றனர். [3] கொல்கத்தாவில் உள்ள லாலா லஜ்பத் ராய் சரணியில் இந்த கட்டிடம் உள்ளது.

போஸ் 1941 ஆம் ஆண்டில் நேதாஜி பவனில் வீட்டுக் காவலில் இருந்து தப்பித்து பேர்லினுக்கு தப்பி ஓடினார். அதன்பிறகு, நீர்மூழ்கிக் கப்பல் (ஜெர்மன் யு-படகு U-180 மற்றும் சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ.29) மூலம் ஜப்பான் - தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்தார். இந்திய தேசிய இராணுவத்தை ஒழுங்கமைத்து, பிரித்தானிய இந்திய இராச்சியத்தின் மீது இம்பீரியல் ஜப்பானிய இராணுவத்துடன் இணைந்து போராடினார்.

நேதாஜி பவன்

போஸின் கால்தடங்களின் நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நேதாஜி பவன்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மோகன்தாஸ் கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் நேதாஜி பவனுக்கு விஜயம் செய்தனர்.

1945 இல் நேதாஜி பவனில் மகாத்மா காந்தி.

சமீபத்தில், 2007 ஆம் ஆண்டில், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே நேதாஜி பவனுக்கு விஜயம் செய்தார்.

நேதாஜி பவன்
நேதாஜி பவன்
நேதாஜி பவன்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  2. http://www.business-standard.com/article/pti-stories/declare-netaji-s-birthday-as-national-holiday-wb-governor-114122300474_1.html
  3. http://www.thehindu.com/todays-paper/netajis-birth-anniversary-fete-turns-sour/article5612659.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதாஜி_பவன்&oldid=3614170" இலிருந்து மீள்விக்கப்பட்டது