நேரிசைச் சிந்தியல் வெண்பா
நேரிசைச் சிந்தியல் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணத்தோடு நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்ற ஒரே வகை எதுகை கொண்டு (ஒரு விகற்பத்தானும்) அல்லது இரண்டு வகை எதுகைகள் கொண்டு (இரு விகற்பத்தானும்) மூன்று அடிகள் கொண்டு வருவது ஆகும். [1]
- எடுத்துக்காட்டு
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப - செறிந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
இஃது இரண்டாவது அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 176