நேரு கோப்பை படகுப் போட்டி
நேரு கோப்பை படகுப் போட்டி (Nehru Trophy Boat Race) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் இரண்டவது சனிக்கிழமையன்று நடைபெறும். இதை வள்ளங்களி (வள்ளம்-படகு , களி-விளையாட்டு) என்றும் மலையாளம் மொழியில் சொல்வர். இதன் அர்த்தம் படகு விளையாட்டு என்பதாகும். இந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டி என்பது பாம்புப் படகுப்போட்டி ஆகும். இதனை மலையாளத்தில் சுண்டான் வள்ளம் என்று அழைப்பர். இது ஒரு முக்கியமான சுற்றுலா நிகழ்வாக அமைகிறது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு ரசிக்க வருவர்.
போட்டிகள்
தொகுபாம்புப் படகுப் போட்டி தவிர சுருளான் படகு, இருட்டுக்குதி படகு, ஓடிப் படகு, வைப்புப் படகு, வடக்கே ஓடும் படகு மற்றும் சிறிய படகு எனும் பெயர்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 1952 ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த நேரு அவர்கள் கேரளாவிற்குச் செல்லும் போது முன் கூட்டியேத் திட்டமிடாத முதல் போட்டி நடைபெற்றது.[1] அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு பரிசு வழங்கினார். அதன் பின் ஒவ்வொரு வருடமும் இப்போட்டி அவரின் பெயராலே நடந்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் திருவாங்கூர் கொச்சி சமூகத்தில் நல்ல மரியாதையையும் அந்தஸ்தையும் பெறுவர்.
புகைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு