நேரு விளையாட்டரங்கம், சிமோகா
நேரு விளையாட்டரங்கம், சிமோகா (Nehru Stadium, Shimoga) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா நகரிலுள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமாகும். முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளின் போட்டிகளை ஏற்பாடு செய்ய இவ்வரங்கம் பயன்படுத்தப்படுகிறது.[1] இரண்டு முறை இங்கு துடுப்பாட்ட முதல் தரப் போட்டிகள் நடந்துள்ளன.[2] 1973 ஆம் ஆண்டில் கர்நாடக துடுப்பாட்ட அணி ஆந்திர துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியதும்[3] மீண்டும் 1979 இல் கர்நாடக துடுப்பாட்ட அணி கேரள துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியதும் இங்கு நடைபெற்ற அவ்விரு போட்டிகளாகும்.[4] அதன் பின்னர் அரங்கம் எந்த துடுப்பாட்ட போட்டிகளையும் நடத்தவில்லை.[5]
முழுமையான பெயர் | வடக்கு இரயில்வே விளையாட்டரங்கம் |
---|---|
முன்னாள் பெயர்கள் | சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் |
அமைவிடம் | சிமோகா, கருநாடகம் |
இருக்கை எண்ணிக்கை | 5,000 |
கட்டுமானம் | |
Broke ground | 1973 |
திறக்கப்பட்டது | 1973 |
வலைத்தளம் | |
Cricinfo |