நேர்மையான பணியாள் உவமை

நேர்மையான பணியாள் இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஓர் உவமானக் கதையாகும். இது மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இது விவிலிய நூல் அல்லாத தோமஸ் நற்செய்தியிலும் காணப்படுகிறது. மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40 மற்றும் தோமஸ் 21 இலும் இவ்வுவமையை வாசிக்கலாம்.[1][2][3]

நேர்மையான பணியாள்

உவமை

தொகு

ஒருவர் நெடு பயணம் ஒன்று செல்லும் போது தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறப் பணியாள் ஒருவரை அமர்த்திச் சென்றார். தலைவர் திரும்பி வரும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அறிவாளியாவான். அவன் பேறு பெற்றவன். ஏனெனில் தலைவர் அவனை தம் சொத்துக்கெல்லாம் அதிகாரியாக பணிப்பார்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் எண்ணி தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

பொருள்

தொகு

இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. இயேசு கூறியவற்றை அவர் திரும்ப வரும் போது செய்துகொண்டிருபோரே அறிவாளிகளாவார்கள் என்பது பொருளாகும். இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம். மனித குமாரன் (இயேசு) வரும் நேரத்தை அறியாத படியால் விழித்திருங்கள் (அவது போதனைப் படி நடவுங்கள்) என்பது இவ்வுவமையின் அடிப்படையாகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Faithful and Wise Steward
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்மையான_பணியாள்_உவமை&oldid=4100258" இலிருந்து மீள்விக்கப்பட்டது