நைக் கோர்னெக்கி
நைக் கோர்னெக்கி (Nike Kornecki) (பிறப்பு ஆகஸ்ட் 18, 1982) இவர் ஓர் இசுரேலிய ஒலிம்பிக் மாலுமி ஆவார். மேலும் 470 வகை இரட்டை கை துடுப்புப் போட்டியில் போட்டியிடுகிறார். [1] [2] [3] 2004 ஆம் ஆண்டில், 470 வகை உலகப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 18, 1982 இத்தாலி |
உயரம் | 5 அடி 4 அங்குலம் |
எடை | 110 கி |
விளையாட்டு | |
நாடு | இசுரேல் |
விளையாட்டு | படகோட்டம் |
நிகழ்வு(கள்) | 470 பிரிவு மகளிர் இரு நபர் படகோட்டம் |
சுயசரிதை
தொகுஒரு யூதரான இவர் இத்தாலியில்பிறந்தார். [4]
படகோட்டம் தொழில்
தொகு2000 ஆம் ஆண்டில், இவர் வேர்டு புஸ்கிலா என்பவருடன் கூட்டு சேர்ந்தார். 2001 இல் இவர்கள் அயர்லாந்தில் நடந்த ஐரோப்பியப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். [3] [4] 2004 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் நடந்த ஐரோப்பியப் போட்டிகளிலும், குரோவாசியாவின் ஜாதரில் 470 உலகப் போட்டிகளுலும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். [2]
2004 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் நடந்த பெண்கள் கோடை ஒலிம்பிக்கில் பெண்கள் 470 வகுப்பு இரண்டு நபர்கள் டிங்கியில் இஸ்ரேல் சார்பாக போட்டியிட்டு 18 வது இடத்தைப் பிடித்தனர். [1] இவர்கள் 2005 ஐரோப்பியப் போட்டிகளைல் வெள்ளிப் பதக்கம் வென்றனர். [3]
2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் 470 வகுப்பு இரண்டு நபர்கள் டிங்கியில் இஸ்ரேல் சார்பாக போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பிடித்தனர் . [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Nike Kornecki". Sports-reference. Archived from the original on April 18, 2020. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.
- ↑ 2.0 2.1 "Nike Kornecki". Sailing.org. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.
- ↑ 3.0 3.1 3.2 Tammy Berger. "Our Representatives at the Olympics" (PDF). IDC Herzliya. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "Vered Buskila (1983–)". Jewishvirtuallibrary.org. 2011. பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.