நைட்ரசமின்
நைட்ரசமின்கள் (Nitrosamines) என்பவை R1N(–R2)–N=O என்ற வேதிக் கட்டமைப்பைக் கொண்ட வேதிச் வேதிச்சேர்மங்கள் ஆகும். நைட்ரசோ தொகுதி ஓர் அமீன் தொகுதியுடன் பிணைக்கப்பட்டு நைட்ரசமின்கள் உருவாகின்றன. இக்கூட்டுப்போருள் மிகவும் மோசமான வலுவான புற்றூக்கியாகும். ஊதுபை போன்ற பால்மப் பொருட்களில் நைட்ரசமின்கள் காணப்படுகின்றன[1]. மேலும், நைட்ரசமின்கள் நமது உடலில் இயற்கையாகவே காணப்படுகின்றன. கௌமாரிக் அமிலமும் (Coumaric acid ) குளோரோசெனிக் அமிலமும் (Chlorogenic acid ) நைட்ரசமினின் செயல்பாட்டினை தடுக்கின்றன. இவ்விரு பொருட்களும் தக்காளிப்பழத்தில் உள்ளன. நுரையீரல் புற்றை தோன்றாமல் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன.
புற்றுநோய்
தொகுயான் பார்னெசு, பீட்டர் மகீ என்ற இரண்டு பிரித்தானிய வின்ஞானிகள் 1956 ஆம் ஆண்டில் இருமெத்தில்நைட்ரசமின்கள் எலிகளின் கல்லீரலில் கட்டிகளை உண்டாக்குவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தோராயமாக 90 சதவீதம் நைட்ரசமின் சேர்மங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன என நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Altkofer, W; Braune, S; Ellendt, K; Kettl-Grömminger, M; Steiner, G (2005). "Migration of nitrosamines from rubber products--are balloons and condoms harmful to the human health?". Molecular nutrition & food research 49 (3): 235–8. doi:10.1002/mnfr.200400050. பப்மெட்:15672455.