நைட்ரேட்டு எசுத்தர்
நைட்ரேட்டு எசுத்தர் (Nitrate ester) என்பது R−ONO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். வாய்பாட்டிலுள்ள R என்பது எந்த ஒரு கரிமக் குழுவையும் குறிக்கிறது. இவை நைட்ரிக் அமிலம் மற்றும் ஆல்ககால்களின் எசுத்தர் உப்புகளாகும். நன்கு அறியப்பட்ட ஓர் உதாரணம் நைட்ரோகிளிசரின் ஆகும், பெயரில் நைட்ரோ இருந்தாலும் இது ஒரு நைட்ரோ சேர்மம் அல்ல.
தயாரிப்பு
தொகுநைட்ரேட் எசுத்தர்கள் பொதுவாக நைட்ரிக் அமிலம் மற்றும் ஆல்ககாலின் ஒடுக்க வினை மூலம் தயாரிக்கப்படுகின்றன:[1][2] உதாரணமாக, கந்தக அமிலத்தின் முன்னிலையில் மெத்தனாலுடன் நைட்ரிக் அமிலத்தை வினைபுரியச் செய்து எளிய நைட்ரேட்டு எசுத்தரான மெத்தில் நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது:[3]
- CH3OH + HNO3 -> CH3ONO2 + H2O
நைட்ரேட் எசுத்தரின் உருவாக்கம் நைட்ராக்சிலேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
வெடிக்கும் பண்பு
தொகுநைட்ரேட்டு எசுத்தர்களின் வெப்பச் சிதைவு முக்கியமாக மூலக்கூறு நைட்ரசனையும் (N2) கார்பன் டை ஆக்சைடு வாயுவையும் அளிக்கிறது. மூலக்கூறு நைட்ரசனில் உள்ள பிணைப்பின் அதிக வலிமை வெடிப்பின் கணிசமான இரசாயன ஆற்றலுக்கு காரணமாகும். இந்த விகிதாச்சாரம் நைட்ரோகிளிசரின் வெடிப்பிற்கான சமன்பாட்டின் மூலம் விளக்கப்படுகிறது.
சில கரிம நைட்ரேட்டுகளின் அதிக உணர்திறன் தன்மைக்கு எடுத்துக்காட்டு Si(CH2ONO2)4 ஆகும்.[4][5] இந்த சேர்மத்தின் படிகமானது ஓரு கலவைக் கரண்டியுடன் தொடர்பு கொள்ளும்போது கூட வெடிக்கிறது. சிலிகோ பரிசோதனையில் மிகவும் பாதுகாப்பானது என்று ஊகிக்கப்பட்ட இதன் வெப்ப உமிழ்வுச் சிதைவுக்கு மற்றொரு பங்களிப்பாளர், வழக்கமான நான்கு கார்பன் அணுக்கள் ஒருங்கிணைப்புடன் கூடுதலாக இரண்டு ஆக்சிசன் நைட்ரிட்டோ குழுக்களுடன் ஒருங்கிணைக்க இயலும் படிக கட்டத்தில் உள்ள சிலிக்கானின் திறன் ஆகும். இந்த கூடுதல் ஒருங்கிணைப்பு சிதைவு விளைபொருளில் ஒன்றான சிலிக்கன் டை ஆக்சைடு உருவாவதை எளிதாக்கும்.
மருத்துவப் பயன்கள்
தொகுநைட்ரேட் எசுத்தர்களான ஐசோசார்பைடு இருநைட்ரேட்டும் (ஐசோர்டில்) மற்றும் ஐசோசார்பைடு மோனோநைட்ரேட்டும் (இம்டுர், இசுமோ, மோனோகெட்டு, மோனோநைட்ரான்) ஆகியவை நைட்ரிக் ஆக்சைடாக, சக்திவாய்ந்த இயற்கையான வாசோடைலேட்டராக உடலில் மாற்றப்படுகின்றன. மருத்துவத்தில், இந்த எசுடர்கள் மார்பு நெரிப்பு இதய நோய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்புடைய சேர்மங்கள்
தொகுஅசிட்டைல் நைட்ரேட்டு என்பது நைட்ரேட் நீரிலியாகும். இது நைட்ரிக் மற்றும் அசிட்டிக் அமிலங்களின் ஒடுக்கத்திலிருந்து பெறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Snyder, H. R.; Handrick, R. G.; Brooks, L. A. (1942). "Imidazole". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0471.; Collective Volume, vol. 3, p. 471
- ↑ Boschan, Robert; Merrow, Raymond T.; van Dolah, Robert W. (1955-06-01). "The Chemistry of Nitrate Esters" (in en). Chemical Reviews 55 (3): 485–510. doi:10.1021/cr50003a001. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. https://pubs.acs.org/doi/abs/10.1021/cr50003a001.
- ↑ Alvin P. Black; Frank H. Babers. "Methyl nitrate". Organic Syntheses.; Collective Volume, vol. 2, p. 412
- ↑ The Sila-Explosives Si(CH2N3)4 and Si(CH2ONO2)4: Silicon Analogues of the Common Explosives Pentaerythrityl Tetraazide, C(CH2N3)4, and Pentaerythritol Tetranitrate, C(CH2ONO2)4Thomas M. Klapötke, Burkhard Krumm, Rainer Ilg, Dennis Troegel, and Reinhold Tacke J. Am. Chem. Soc.; 2007 எஆசு:10.1021/ja071299p
- ↑ Sila-Explosives Offer A Better Bang Stephen K. Ritter Chemical & Engineering News May 7 2007Link