நைட்ரைல் ஒடுக்கம்

நைட்ரைல் ஒடுக்கம் (Nitrile reduction) என்பது ஒரு நைட்ரைல் சேர்மம் பொருத்தமான வேதி வினையூக்கியின் உதவியால் ஒர் அமீன் அல்லது ஓர் ஆல்டிகைடாக ஆக்சிசன் ஒடுக்கம் அடைகின்ற வினையைக் குறிக்கிறது.[1]

ஐதரசனேற்றம்

தொகு

ஐதரசனேற்றமே நைட்ரைல் ஒடுக்க வினையின் பெரிய அளவிலான பயன்பாடு ஆகும். நல்லியல் நிலை நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிலையில் இவ்வினை முதனிலை அமீன்களைத் தருகிறது.

 

நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இடைநிலையாகத் தோன்றும் இமீன் சேர்மமானது அமீன் பொருட்களால் தாக்கப்பட்டு இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை அமீன்களைத் தருகிறது. இவ்வினைகள் இடைப்பட்ட நிலை வேதிப்பொருட்களான ஈனாமின்கள் வழியாக நிகழ்கின்றன. நைலான் தயாரிப்பதற்கு முன்னோடிச் சேர்மமான கொழுப்பு அமீன்கள் இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்படுகின்றன. இம்முறையே வர்த்தகரீதியான பயன்பாட்டு முறையாகும்[2].

அமீன்களுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்

தொகு

சோடியம்[3], இலித்தியம் அலுமினியம் ஐதரைடு, ரானே நிக்கல்/ஐதரசன் அல்லது இருபோரேன் முதலான வினைச் செயலிகளை உபயோகித்து நைட்ரலை அமீன்களாக மாற்றலாம்[4][5][6] or diborane [7]. நைட்ரசன் ஐதரசன் பிணைப்பு உருவாக்கும் கரிம வேதியியல் வினைகள் பலவற்றில் இவ்வினையும் ஒன்றாகும்.

ஆல்டிகைடுகளுக்கான வினையூக்கி அல்லாத வழிமுறைகள்

தொகு

நைட்ரைல்களை ஆல்டிகைடுகளாகவும் ஒடுக்க முடியும். வெள்ளீயம்(II) குளோரைடு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் இமினியம் உப்பை நீராற்பகுத்தல் மூலம் ஆல்டிகைடு தயாரிக்கும் சிடிபென் ஆல்டிகைடு தொகுப்புமுறை ஒரு வழிமுறையாகும். ஐதரசனுடன் சேர்த்து இமைனை கள நீராற்பகுப்பு செய்வதன் மூலமாகவும் நைட்ரைலில் இருந்து ஆல்டிகைடு தயாரிக்க முடியும். ரானே நிக்கல்,[8] lithium aluminium hydride and sodium borohydride.

இலித்தியம் அலுமினியம் ஐதரைடு மற்றும் சோடியம் போரோ ஐதரைடு முதலியன இவ்வினைக்கான வினைச் செயலிகள் ஆகும்.

மின்வேதியியல் முறைகள்

தொகு

நைட்ரைல்களை மின்வேதியியல் முறையிலும் ஆக்சிசன் ஒடுக்கம் செய்ய இயலும்.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  2. J. Barrault, Y. Pouilloux "Catalytic Amination Reactions Synthesis of fatty amines. Selectivity control in presence of multifunctional catalysts" Catalysis Today 1997 Volume Pages 137–153. எஆசு:10.1016/S0920-5861(97)00006-0
  3. Suter, C. M.; Moffett, Eugene W. (1934). "The Reduction of Aliphatic Cyanides and Oximes with Sodium and n-Butyl Alcohol". Journal of the American Chemical Society 56 (2): 487-487. doi:10.1021/ja01317a502. 
  4. Organic Syntheses, Coll. Vol. 3, p.229 (1955); Vol. 27, p.18 (1947). Link
  5. Organic Syntheses, Coll. Vol. 3, p.358 (1955); Vol. 27, p.33 (1947). Link
  6. Organic Syntheses, Coll. Vol. 3, p.720 (1955); Vol. 23, p.71 (1943). Link
  7. Organic Syntheses, Coll. Vol. 6, p.223 (1988); Vol. 53, p.21 (1973). Link
  8. Organic Syntheses, Coll. Vol. 6, p.631 (1988); Vol. 51, p.20 (1971). Link
  9. V. Krishnan, A. Muthukumaran, H. V. K. Udupa (1979). "The electroreduction of benzyl cyanide on iron and cobalt cathodes". Journal of Applied Electrochemistry 9 (5): 657-659. doi:10.1007/BF00610957. http://link.springer.com/article/10.1007/BF00610957. 
  10. V. Krishnan, A. Muthukumaran, H. V. K. Udupa (1983). Process for Electrochemical Preparation of beta phenylethylamine using cobalt black cathode (PDF). Calcutta: India Patent Office.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரைல்_ஒடுக்கம்&oldid=1978828" இலிருந்து மீள்விக்கப்பட்டது