நைட்ரோசில் சயனைடு
நைட்ரோசில் சயனைடு (Nitrosyl cyanide) CN2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு இடைப்பட்ட ஒரு நிறத்தில் வாயு நிலையில் இது காணப்படுகிறது, [1] வினையூக்கியான குளுக்கோசு ஆக்சிடேசு என்ற நொதியின் முன்னிலையில் சயனமைடை ஆக்சிசனேற்றம் செய்து தேவைப்படும்போது நைட்ரோசில் சயனைடு தயாரிக்கப்படுகிறது, [2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நைட்ரசு சயனைடு | |
இனங்காட்டிகள் | |
4343-68-4 | |
ChemSpider | 109829 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123214 |
| |
பண்புகள் | |
CN2O | |
வாய்ப்பாட்டு எடை | 56.02 g·mol−1 |
தோற்றம் | நீலப்பச்சை வாயு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பும் வினைத்திறனும்
தொகுநைட்ரோசில் சயனைடு சமதளக் கட்டமைப்பில் உள்ளது. நைட்ரோசில் குளோரைடின் கட்டமைப்பிற்கு ஒப்பானதாகவும் உட்புற நைட்ரசனில் வலுவாக வளைந்தும் காணப்படுகிறது. C-N-O அமைப்பின் பிணைப்புக் கோணம் 113° ஆகும். NCN அமைப்பின் பிணைப்புக் கோணம் 170°.[1] குறைந்த வெப்பநிலையில் நைட்ரோசில் குளோரைடுடன் வெள்ளி சயனைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் இச்சேர்மத்தை உருவாக்க முடியும். பொதுவாக இச்சேர்மம் தனிமைப்படுத்தப்படுவதில்லை, ஆனால் டையீல்சு -ஆல்டர் வினைகளில் பியூட்டாடையீன் உடன் கிடைக்கிறது. N=O பிணைப்பு முழுவதும் வளையக்கூட்டு வினைகள் நிகழ்கின்றன. 9,10-இருமெத்தில் ஆந்திரசீன் உடன் மீளக்கூடிய ஒரு கூட்டுவிளைபொருளை இது உருவாக்குகிறது.
தொடர்புடைய சேர்மம்
தொகுநிறமற்ற வாயுவான நைட்ரைல் சயனைடு, நைட்ரோசில் சயனைடுடன் தொடர்பு கொண்ட சேர்மமாகும். இதனுடைய கொதிநிலை 7 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kirby, G. W. (1977). "Tilden Lecture. Electrophilic C-nitroso-compounds". Chemical Society Reviews 6: 1. doi:10.1039/CS9770600001.
- ↑ Shirota, Frances N.; Goon, David J.W.; Demaster, Eugene G.; Nagasawa, Herbert T. (1996). "Nitrosyl cyanide, a putative metabolic oxidation product of the alcohol-deterrent agent cyanamide". Biochemical Pharmacology 52 (1): 141–147. doi:10.1016/0006-2952(96)00174-8. பப்மெட்:8678898.
- ↑ Rahm, Martin; Bélanger-Chabot, Guillaume; Haiges, Ralf; Christe, Karl O. (2014). "Nitryl Cyanide, NCNO2". Angewandte Chemie International Edition 53 (27): 6893–6897. doi:10.1002/anie.201404209. பப்மெட்:24861214.