நைதோர்ப் வேறுபாடு
சதுரங்கம் விளையாட்டில் நைதோர்ஃப் வேறுபாடு (Najdorf Variation,[1] /ˈnaɪdɔːrf/) என்பது சிசிலியன் தற்காப்பு ஆட்டத்தின் வேறுபட்ட ஒருவகை திறப்பு ஆட்டமாகும். அனைத்துவகை திறப்புகளிலும் மிகவும் மதிக்கப்படுகின்ற மற்றும் ஆழ்ந்து ஆராயப்பட்ட சதுரங்கத் திறப்பாட்டம் இதுவாகும். நவீன சதுரங்கத் திறப்புகள் நைதோர்ஃப் திறப்பை, சதுரங்கத் திறப்புகளின் ”கேடில்லாக்” அல்லது ”ரோல்சு இராய்சு” என்று அழைக்கின்றன. போலந்து – அர்கெந்தீனா கிராண்ட் மாஸ்டர் மிகுவெல் நைதோர்ஃப் இத்திறப்பாட்டத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. பல சர்வதேச சதுரங்க வீரர்கள், குறிப்பாக பாபி பிசர் மற்றும் காரி காஸ்பரொவ் ஆகியோர் இத்திறப்பாட்டத்திலேயே வாழ்ந்தார்கள் எனக்கூறலாம். குறிப்பாக காஸ்பரொவ் பெரும்பாலும் நைதோர்வ் சிகிவென்சியன் திறப்புக்கு இடம்மாறிக் கொள்வார்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 c5 2.Nf3 d6 3.d4 cxd4 4.Nxd4 Nf6 5.Nc3 a6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | B90–B99 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | மிகவுல் நைதோர்ப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | திறந்த சிசிலியன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
நைதோர்ஃப் வேறுபாடு இவ்வாறு தொடங்குகிறது.
- 1. e4 c5
- 2. Nf3 d6
- 3. d4 cxd4
- 4. Nxd4 Nf6
- 5. Nc3 a6
கருப்பு தன்னுடைய ஐந்தாவது நகர்வான a6 என்ற நகர்வை ஆடியவுடன் நைதோர்ப் வேறுபாட்டு நகர்வுக்குள் நுழைகிறது. வெள்ளை ஆட்டக்காரர் Nb5 அல்லது Bb5 என்று நகர்த்துவதைத் தடுக்கிறது. அதே நேரத்தில் b7-b5 சதுரத்திற்கு நகர்த்தவும் தன்னை தயார்படுத்திக் கொள்கிறது.
ஒருவேளை கருப்பு தன்னுடைய 5 ஆவது நகர்வை 5…..e5 என்று நகர்த்தியிருந்தால், உடனடியாக வெள்ளை 6.Bb5+! என்று நகர்த்தியிருப்பார். பதிலாக கருப்பு 6……Bd7 அல்லது 6……Nbd7 என்று ஆடவேண்டியிருக்கும்.
கருப்பு 6……Bd7 எனில்,
6.Bb5+! Bd7 7.Bxd7+ Nbxd7 8.Nf5 என்று ஆட்டம் தொடர்ந்து f5 சதுரத்தில் இருந்து குதிரை விலக்கிக் கொள்வது மிகவும் சிரமமான செயலாகிவிடும் கருப்பு 6...Nbd7 என்று நகர்த்தினாலும் வெள்ளை உடனடியாக 6...Nbd7 7.Nf5 என்று விளையாடி கிட்டத்தட்ட அதே சிக்கல் விளைகிறது.
கருப்பின் திட்டம், வழக்கமாக இராணியின் பக்கமாக ஒரு சிறிய தாக்குதலை நிகழ்த்தி வெள்ளையின் e4 சிப்பாய்க்கு நெருக்குதலை உண்டாக்குவதுதான். இத்திட்டம் பெரும்பாலும் ...b5, ...Bb7 என்று விளையாடி பின்னர் குதிரையை b6 வழியாக c5, அல்லது c4 சதுரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நிகழும்.
வேறுபாடுகள்
தொகுமுதன்மையான வரிசை 6.Bg5
தொகுமரபுவழி வரிசை 6. …..e6
தொகுa | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
தொடக்கக்கால நைதோர்ஃப் திறப்பாட்டத்தில் வெள்ளை தன்னுடைய ஏழாவது நகர்வை 7.Qf3 என்று நகர்த்துவது பிரபலமாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்நகர்வாக 7...h6 ஆடப்பட்டு வெள்ளைக்கு கிடைக்கும் உண்மையான அனுகூலங்கள் தடுக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் தற்கால ஆட்டக்காரர்கள் இதற்கு எதிராக 8 e5 என்ற இலக்குடன், 7. f4 என்று நகர்த்தி அடுத்ததாக ஒரு காயைக் கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தும் நகர்வை விளையாடுகிறார்கள். ஆனால, கருப்புக்கு பல்வேறு நகர்த்தல் வாய்ப்புகள் உள்ளன.
- 7... Be7 என்று நகர்த்தலாம். இவ்வாறு நகர்த்தினால், 8. Qf3 என்றால்.
- 8... Qc7 9. 0-0-0 Nbd7, என விளையாடுவது பழைய வரிசை முறை ஆட்டமாகும். இவ்விடத்தில் வெள்ளையின் ஆட்டம் வழக்கமாக 10. g4 அல்லது 10. Bd3. இந்த நகர்வுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் மிகவிரிவான திறப்பாட்ட வரிசைகள் தொடங்குகின்றன.
- 8... h6 9. Bh4 g5. வேறுபடும் இந்நகர்வின் பெயர் அர்கெந்தீனன்/கோட்டிபோர்க்கு வேறுபாடு எனப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு கோட்டிபோர்க்கில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியின் 14 ஆவது சுற்று ஆட்டத்தில் இவ்வேறுபாட்டு ஆட்டம் முதன்முதலில் ஆடப்பட்டது. பேன்னோ, பில்நிக், நைதோர்ப் ஆகியோர் உருசியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் கெல்லர். இஸ்பேஸ்கி, கீரஸ் ஆகியோரை எதிர்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையிலான அந்த ஆட்டங்கள் இவ்வாறு தொடர்ந்தன. 10. fxg5 Nfd7 கருப்பு தன் குதிரையை முதலில் e5 சதுரத்திற்கு கொண்டு வந்து பின்னர்,d7 அல்லது c6 சதுரத்தில் நிறுத்த நினைக்கிறது. 11. Nxe6!? (எபிம் கெல்லர்' கண்டுபிடிப்பு).11... fxe6 12. Qh5+ Kf8 13. Bb5 பேன்னோ மற்றும் நைதோர்ப் இருவரும் 13...Ne5 நகர்வையும் பில்நிக் 13...Kg7 நகர்வையும் விளையாடினர். இருந்தாலும் மூன்று அர்கெந்நீனா ஆட்டக்காரர்களும் தோற்றனர். சிறிது காலத்திற்குப் பின்னர் 13... Rh7! என்ற தற்காப்பு நகர்வை விளையாடி பாபி பிசர் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தார்.
- 7... Qb6 மேல்மட்ட அளவில் மிகப்பிரபலமாக ஆடப்பட்ட நகர்வு இது.
- 8. Qd2 மிகவும் சிக்கல் நிறைந்த் நச்சு சிப்பாய் வேறுபாடு உள்ள நகர்வு இதுவாகும். :8... Qxb2 9. Rb1 (9.Nb3 என்ற நகர்வு மிகவும் குறைவான வாய்ப்புள்ள பொதுவான நகர்வு ஆகும்).9... Qa3 இங்கு வெள்ளை 10. f5 மற்றும் 10. e5 என்ற இரண்டு நகர்வுகளில் ஒன்றைச் செய்ய முடியும். இவ்விரண்டு நகர்வுகளுமே மிகக்கூர்மையான திட்டமிட்ட ஆட்டத்திற்கு அழைத்துச் செல்லும். கவனம் சிறிது பிசகினாலும் இருவருக்குமே அபாயகரமான சூழல்தான் உண்டாகும்.2006 ஆம் ஆண்டில் இருந்து 10. e5 என்று நகர்த்தப்பட்டு பிரபலமானது. இந்த நகர்வு ஒன்றே நச்சுச் சிப்பாய் வேறுபாட்டு நகர்வை வெற்றிகொள்ள உதவும் நகர்வாக நகர்வுக் கோட்பாடுகள் கருதுகின்றன.10. f5) என்ற நகர்வும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டத்தைச் சமநிலையில் முடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உதாரண ஆட்டமாக மாஸ்கோவில் 2004 [2]ஆம் ஆண்டு நடைபெற்ற வாளியோ போன்சுக்கு எதிரான காரி காஸ்பரொவ் ஆட்டத்தைக் குறிப்பிடலாம். 1970 களில் சதுரங்க ஆட்டத்தில் நிகழ்ந்த ஒரு புரட்சிகரமான ஆட்டத்திற்கு இந்த ஆட்டம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நவீன கிராண்ட்மாஸ்டர் சமநிலை மாதிரி ஆட்டம் என்றும் இவ்வாட்டம் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sicilian, Najdorf (B90)". Chess openings. Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-19.
- ↑ "Francisco Vallejo-Pons vs Garry Kasparov (2004)". பார்க்கப்பட்ட நாள் 2008-01-19.
வெளி இணைப்புகள்
தொகு- Comprehensive engine analysis of White's response to the Najdorf
- Najdorf Variation video and analysis
- Najdorf Variation at ChessGames.com
- Sicilian Defense Najdorf Variation, English Attack (B90) – Openings – Chess.com