நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு (Niobium(V) oxynitrate) NbO(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நாற்கோணகப் படிகங்களாக திண்மநிலை இது காணப்படுகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து நையோபியம் ஐந்தாக்சைடை கொடுக்கிறது.

நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு
Niobium(V) oxynitrate
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • நையோபைல் நைட்ரேட்டு
  • நையோபியம் ஆக்சிநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
100456-47-1 N
EC number 623-412-8
InChI
  • InChI=1S/3NO3.Nb.O/c3*2-1(3)4;;/q3*-1;+3;
    Key: XWRVJMHGWNZEAR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Nb](O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)=O
பண்புகள்
NbO(NO3)3
வாய்ப்பாட்டு எடை 294.92 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 120 °C (248 °F; 393 K)[1] (சிதைவடையும்)
வினைபுரியும்[1]
கரைதிறன் டை எத்தில் ஈதர், மெத்தில் சயனைடு, மற்றும் பென்சீன் ஆகியவற்றில் சிறிதளவு கரையும்.[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்[1]
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H315, H319, H335
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நையோபியம் ஆக்சிகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வனேடைல் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
NbO(NO3)3 + H2O → Nb2O5 + HNO3

தயாரிப்பு

தொகு

நையோபியம் பெண்டாகுளோரைடுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு சேர்மத்தைச் சேர்த்து 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நையோபியம்(V) ஆக்சிநைட்ரேட்டு உருவாகிறது.:[1]

NbCl5 + 4N2O5 → NbO(NO3)3 + 5NO2Cl

நைட்ரைல் குளோரைடு இவ்வினையில் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. அசிட்டோநைட்ரைல் முன்னிலையில் டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நையோபியம் பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அசிட்டோநைட்ரைல் நையோபியம் டையாக்சைடு டைநைட்ரேட்டு அணைவுச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் தண்ணீருடன் வினைபுரிந்து நையோபியம் பென்டாக்சைடை உருவாக்கி 65 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 B. O. Field; C. J. Hardy (1963). "Trinitratoniobium(V) Oxide, NbO(NO3)3" (in English). Proceedings of the Chemical Society: 11. doi:10.1039/PS9630000001. 
  2. K. W. Bagnall; D. Brown; P. J. Jones (1964). "Niobium(V) and tantalum(V) nitrates" (in English). Journal of the Chemical Society (451): 2396-2400. doi:10.1039/JR9640002396.