நையோபியம் ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

நையோபியம் ஆக்சலேட்டு (Niobium oxalate) Nb(HC2O4)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியத்தின் ஆக்சலேட்டு உப்பாகக் கருதப்படும் இது நிறமற்று ஒற்றைச் சரிவச்சுப் படிகங்களாகத் தோன்றுகிறது. நடுநிலையான நையோபியம் ஆக்சலேட்டு இதுவரை தயாரிக்கப்படவில்லை.[2]

நையோபியம்(V) ஐதரசன் ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம் ஆக்சலேட்டு
நையோபியம் பெண்டாக்சலேட்டு
இனங்காட்டிகள்
149598-62-9 Y
21348-59-4 Y
InChI
  • InChI=1S/C2H2O4.Nb/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);
    Key: XTTKJDYDBXPBDJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Nb].O=C(O)C(=O)O
பண்புகள்
Nb(HC2O4)5
வாய்ப்பாட்டு எடை 538.056
தோற்றம் நிறமற்ற ஒற்றைச் சரிவு படிகங்கள்[1]
நீரில் கரையும்
கரைதிறன் ஆக்சாலிக் அமிலத்தில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அணைவுச் சேர்மங்கள்

தொகு

நையோபியம்(V) அயனி ஐதராக்சி அமிலங்கள் மற்றும் ஆக்சாலிக் அமிலத்துடன் கூடி அணைவுச் சேர்மங்களைத் தருகிறது. நையோபியத்துடன் டார்டாரிக் அமிலம் உருவாக்கும் உப்பை விட இது சிக்கலானதாகும். டாண்ட்டலத்தில் இப்போ

க்கு எதிராக இருக்கும்.[3] 125° செல்சியசு வெப்பநிலையில் NH4[NbO(C2O4)2(H2O)2]·3H2O தண்ணீரை இழக்கத் தொடங்கி 630° செல்சியசு வெப்பநிலையில் முழுமையாக சிதைவடைந்து நையோபியம் பெண்டாக்சைடு உருவாகிறது.[4] இதை சோடியம் சிட்ரேட்டுடன் சேர்த்து 650 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சோடியம் நையோபெட்டு கிடைக்கும்.[5]

Rb3[NbO(C2O4)3]·2H2O ஒரு நிறமற்ற படிகமாகும். இதில் [NbO(C2O4)3]3- எதிர்மின் அயனி உள்ளடங்கியுள்ளது.[6] Sr3[NbO(C2O4)3]2·8H2O என்ற சேர்மத்திலும் அதே எதிர்மின் அயனி அடங்கியுள்ளது. 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது நீரிலியாக மாறுகிறது. 260° செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. 875° செல்சியசு வெப்பநிலையில் இசுட்ரோன்சியம் கார்பனேட்டாக (SrCO3) இசுட்ரோன்சியம் நையோபேட்டாகவும் (SrNb2O6) சிதைகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. John A Dean. Lange's Handbook of Chemistry, 11th ed. McGraw-Hill Book Company, 1973. pp 4-87
  2. A Textbook of Inorganic Chemistry. Vol VI, Part III. Vanadium, Niobium and Tantalum. Charles Griffin & Company Ltd, 1929. pp 166. Oxalo-niobic Acid.
  3. Shen, Panwen; et al. Series of Inorganic Chemistry. Vol 8. Titanium group, vanadium group, chromium group. Science Press, 2011. pp 279-280.
  4. Xu, Xiaoshu; Su, Tingting; Jiang, Heng. Study on thermal decomposition process of niobium oxalate. Fenxi Yiqi, 2009. (5): 75-77.
  5. Bian, Yu-bo; Jiang, Heng; Su, Ting-ting; Gong, Hong. 柠檬酸钠与草酸铌合成NaNbO3粉体的反应机理 (lit. Study on the synthesis mechanism of NaNbO3 powder from sodium citrate and niobium oxalate). Huaxue Gongchengshi (Chemical Engineer), 2011 (3): 56-58
  6. Šestan, M., Perić, B., Giester, G. et al. Another Structure Type of Oxotris(oxalato)niobate(V): Molecular and Crystal Structure of Rb3[NbO(C2O4)3]⋅2H2O. Struct Chem (2005) 16: 409. doi:10.1007/s11224-005-3111-7
  7. Marta, L., Zaharescu, M. & Macarovici, C.G. Thermal and structural investigation of some oxalato-niobium complexes. Journal of Thermal Analysis (1983) 26: 87. doi:10.1007/BF01914092
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்_ஆக்சலேட்டு&oldid=3931892" இலிருந்து மீள்விக்கப்பட்டது