இசுட்ரோன்சியம் கார்பனேட்டு

வேதிச் சேர்மம்

இசுட்ரோன்சியம் கார்பனேட்டு (Strontium carbonate) என்பது SrCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியத்தின் கார்பனேட்டு உப்பு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு எனப்படுகிறது. வெண்மை அல்லது சாம்பல் நிறத்தில் இவ்வுப்பு தூளாகக் காணப்படுகிறது. இயற்கையில் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு இசுட்ரோசியனைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது.

இசுட்ரோன்சியம் கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியனைட்டு
இனங்காட்டிகள்
1633-05-2 Y
ChemSpider 14666 Y
EC number 216-643-7
InChI
  • InChI=1S/CH2O3.Sr/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2 Y
    Key: LEDMRZGFZIAGGB-UHFFFAOYSA-L Y
  • InChI=1/CH2O3.Sr/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2
    Key: LEDMRZGFZIAGGB-NUQVWONBAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15407
வே.ந.வி.ப எண் WK8305000
SMILES
  • [Sr+2].[O-]C([O-])=O
UNII 41YPU4MMCA Y
பண்புகள்
SrCO3
வாய்ப்பாட்டு எடை 147.63 கி/மோல்
தோற்றம் வெண் தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 3.74 கி/செ.மீ3
உருகுநிலை 1,494 °C (2,721 °F; 1,767 K) (சிதையும்)
0.0011 கி/100 மி.லி (18 °செ)
0.065 கி/100 மி.லி (100 °செ)
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் அமோனியம் குளோரைடு கரைசலில் கரையும்
அமோனியாவில் சிறிதளவு கரையும்
−47.0•10−6செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.518
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS data
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் கார்பனேட்டு
கால்சியம் கார்பனேட்டு
பேரியம் கார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வேதிப்பண்புகள் தொகு

இசுட்ரோன்சியம் கார்பனேட்டு வெண்மை நிறத்தில் நெடியற்றும் சுவையற்றும் தூளாகக் காணப்படுகிறது. ஒரு கார்பனேட்டு உப்பாக இதுவொரு வலிமையற்ற காரமாதலால் அமிலங்களுடன் வினைபுரிகிறது. நிலைப்புத்தன்மையும் பாதுகாப்பாக பணிபுரியவும் ஏற்றதொரு சேர்மமாகவும் கருதப்படுகிறது. நீரில் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு கரையாது. மிகச் சிறிதளவாக இலட்சத்தில் ஒரு பங்கு இது நீரில் கரையும். கார்பன் டை ஆக்சைடு கரைந்து தண்ணீர் நிறைவுற்ற நீர்மமாக மாற்றினால் கரைதிறன் சற்று அதிகரித்து ஆயிரத்தில் ஒரு பங்காக கரையும். நீர்த்த அமிலங்களில் இச்சேர்மம் கரைகிறது.

தயாரிப்பு தொகு

ஒரு கனிமமாக இயற்கையில் தோன்றுவதை தவிர்த்து இசுட்ரோன்சியம் கார்பனேட்டை செயற்கை முறையிலும் தயாரிக்க இயலும். இதற்காக இரண்டு தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இம்முறைகள் இரண்டிலும் இசுட்ரோன்சியம் சல்பேட்டு (SrSO4) கனிமம் செலிசுட்டின் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அதில் ஒன்றான கருப்புச் சாம்பல் செயல்முறையில் செலிசைட்டுடன் கற்கரி சேர்த்து கலவையை 110 முதல் 1300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வறுக்கவேண்டும்[1].இசுட்ரோன்சியம் சல்பைடு விளைபொருளாக உருவாகும். இவ்வினையில் சல்பேட்டானது ஒடுக்கப்பட்டு சல்பைடாகிறது.

SrSO4 + 2 C → SrS + 2 CO2

இசுட்ரோன்சியம் சல்பைடுடன் கார்பன் டை ஆக்சைடு அல்லது சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது[1][2]

SrS + H2O + CO2 → SrCO3 + H2S
SrS + Na2CO3 → SrCO3 + Na2S

நேரடி மாற்றம் அல்லது இரட்டைச் சிதைவு முறை என்பது மற்றொரு செயற்கை தயாரிப்பு முறையாகும். இம்முறையில் செலிசைட்டும் சோடியம் கார்பனேட்டும் சேர்க்கப்பட்ட கலவை நீராவியால் சூடுபடுத்தப்பட்டு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு உருவாக்கப்படுகிறது. கணிசமான அளவுக்கு கரையாத திண்மங்கள் இதில் கலந்திருக்கும்[1]. எனவே இவ்விளைபொருளுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து இசுட்ரோன்சியம் குளோரைடு கரைசல் உருவாக்கப்படுகிறது. பின்னர் கருப்பு சாம்பல் செயல்முறையைப் போலவே கார்பன் டை ஆக்சைடு அல்லது சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மீண்டும் வீழ்படிவாகிறது.

பயன்கள் தொகு

 
நைட்ரிக் அமிலம் இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் வினையில் ஈடுபட்டு இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உருவாகிறது

வானவேடிக்கை பட்டாசுகளில் நிறம் சேர்க்க விலை குறைவான ஒரு வேதிப்பொருளாக பயன்படுவது இதன் பொதுவான பயன்பாடு ஆகும். இசுட்ரோன்சியமும் அதன் உப்புகளும் தீச்சுடரில் அற்புதமான சிவப்பு நிறத்தை வெளியிடுகின்றன. மற்ற இசுட்ரோன்சியம் உப்புகளைப் போலன்றி, இசுட்ரோன்சியம் கார்பனேட் உப்பு பொதுவாக விரும்பப்படுகிறது, ஏனெனில் இது விலையும் குறைவு நீரையும் உறிஞ்சுவதில்லை. அமிலத்தை நடுநிலையாக்குவதற்கான இதன் திறனும் வானவேடிக்கைகளில் மிகவும் உதவியாக இருக்கும். சாலையோர சமிக்ஞைகளிலும் இதேபோன்ற மற்றொரு பயன்பாடு இசுட்ரோன்சியம் கார்பனேட்டுக்கு உள்ளது.

மின்னணுவியல் பயன்பாடுகளுக்கும் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. நேர்மின் முனையிலிருந்து வரும் எலக்ட்ரான்களை உறிஞ்சும் வண்ணத் தொலைக்காட்சி எலக்ட்ரான் ஏற்பிகளை உற்பத்தி செய்ய இது பயன்படுத்தப்படுகிறது[3]. ஒளிரும் கண்ணாடி, ஒளிரும் சாயம் , இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் இசுட்ரோன்சியம் உப்புகள் தயாரிப்பதிலும் சர்க்கரை மற்றும் சிலவகை மருந்துகளை சுத்திகரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது மட்பாண்டத் தொழிலில் மெருகுகூட்ட ஒரு மூலப்பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஓர் இளக்கியாகவும் செயல்படுகிறது மற்றும் சில உலோக ஆக்சைடுகளின் நிறத்தையும் மாற்றியமைக்கிறது. இது பேரியம் கார்பனேட்டை ஒத்த சில பண்புகளைக் கொண்டுள்ளது.

ஒலிபெருக்கிகள் மற்றும் கதவு காந்தங்களில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்களுக்கான இசுட்ரோன்சியம் பெர்ரைட்டு உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சயனோபாக்டீரியா கலோத்ரிக்சு, சினெகோகோகசு மற்றும் குளியோகாப்சா ஆகிய நுண்ணுயிரிகள் நிலத்தடி நீரில் இசுட்ரோன்சியம் கால்சைட்டை வீழ்படிவாக்குகின்றன. திண்மக் கரைசலில் இசுட்ரோன்சியம் ஒரு சதவீதம் அளவுக்கு இசுட்ரோன்சியனேட்டாக உள்ளது[4].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Aydoğan, Salih; Erdemoğlu, Murat; Aras, Ali; Uçar, Gökhan; Özkan, Alper (2006). "Dissolution kinetics of celestite (SrSO4) in HCl solution with BaCl2". Hydrometallurgy 84 (3–4): 239–246. doi:10.1016/j.hydromet.2006.06.001. 
  2. MacMillan, J. Paul; Park, Jai Won; Gerstenberg, Rolf; Wagner, Heinz; Köhler, Karl; Wallbrecht, Peter (2005), "Strontium and Strontium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a25_321
  3. "Strontium Carbonate". primaryinfo.com. பார்க்கப்பட்ட நாள் May 31, 2017.
  4. Henry Lutz Ehrlich; Dianne K Newman (2009). Geomicrobiology, Fifth Edition. CRC Press. பக். 177. 

புற இணைப்புகள் தொகு