நைலாண்டர் சோதனை

நைலாண்டர் சோதனை (Nylander's test) என்பது ஒரு கரைசலில் ஒடுக்கும் சர்க்கரை இருப்பதைக் கண்டறிய உதவும் ஒரு வேதியியல் சோதனையாகும். பிசுமத் ஆக்சிநைட்ரேட்டை காரச் சூழலில் குளுக்கோசு அல்லது பிரக்டோசு பிசுமத்தாக ஒடுக்குகிறது. பிசுமத் நைட்ரேட்டு, பொட்டாசியம் சோடியம் டாரட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நைலாண்டர் வினைப்பொருளை ஒடுக்கும் சர்க்கரைகள் கொண்ட ஒரு கரைசலுடன் சேர்க்கும் போது உலோக பிசுமத்தின் கருப்புநிற வீழ்படிவு உருவாகிறது [1][2][3].

மேற்கோள்கள்

தொகு
  1. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.
  2. S. C. Nigam; S C Nigam Omkar (1 January 2006). Experimental Animal Physiology And Biochemistry. New Age International. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1464-6.
  3. Srinivas B Rao. Practical Biochemistry for Medical Students. Academic Publishers. p. 19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலாண்டர்_சோதனை&oldid=2748451" இலிருந்து மீள்விக்கப்பட்டது