பிசுமத்(III) நைட்ரேட்டு

பிசுமத்(III) நைட்ரேட்டு (Bismuth(III) nitrate) என்பது Bi(NO3)3•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத் நேர்மின் அயனி +3 ஆக்சிசனேற்ற நிலையிலும் நைட்ரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஐந்நைட்ரேட்டுச் சேர்மமே மிகப் பொதுவாகக் காணப்படும் பிசுமத் நைட்ரேட்டு வடிவமாகும்[2]. மற்ற பிசுமத் சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது[3]. வர்த்தக ரீதியாகவும் இச்சேர்மம் விற்பனைக்கு கிடைக்கிறது. இச்சேர்மம் மட்டுமே தொகுதி 15 தனிமத்தால் உருவாக்கப்படுகிறது மற்றும் இவ்வினையே பிசுமத்தின் உலோகப் பண்பை எடுத்துக்காட்டும் வினையாகவும் கருதப்படுகிறது[4].

பிசுமத்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசுமத் முந்நைட்ரேட்டு, பிசுமத்(III) நைட்ரேட்டு ஐந்நீரேற்று
இனங்காட்டிகள்
10035-06-0
EC number 600-076-0
பண்புகள்
Bi(NO3)3·5H2O
வாய்ப்பாட்டு எடை 485.07 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, வெண்மை
அடர்த்தி 2.90 கி/செ.மீ3 (ஐந்துநீரேற்று)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு

பிசுமத் உலோகமும் அடர் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரியும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு உருவாகிறது.[5]

Bi + 4HNO3 → Bi(NO3)3 + 2H2O + NO

பிசுமத்(III) நைட்ரேட்டு நைட்ரிக் அமிலத்தில் கரைகிறது ஆனால் அமிலத்தன்மை சுழியை விட அதிகரிக்கும்போது உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு பல ஆக்சிநைட்ரேட்டுகளைத் தோற்றுவிக்கிறது[6]

அசெட்டோன், அசிட்டிக் அமிலம் மற்றும் கிளிசரால் ஆகியனவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு கரைகிறது ஆனால் நடைமுறையில் எத்தனால் மற்றும் எத்தில் அசெட்டேட்டு [7] ஆகியனவற்றில் கரைவதில்லை.

கரிம வேதியியல் தொகுப்பு வினைகள் சிலவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது என்பது அறியப்படுகிறது. உதாரணமாக, அரோமாட்டிக் சேர்மங்களின் நைட்ரோ ஏற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்பைடில் இருந்து சல்பாக்சைடாக மாற்றும் ஆக்சிசனேற்ற வினை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்[7] . டிராகெண்டோர்ஃப் வினையாக்கி உருவாக்கத்திலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

குப்பெர்ரான் மற்றும் பைரோகலாலுடன் பிசுமத்(III) நைட்ரேட்டு வினைபுரிந்து அணைவுச் சேர்மங்களைத் தருகிறது. பிசுமத்தின் இருப்பைக் கண்டறியும் பருமனறி பகுப்பாய்வில் இவ்விரு சேர்மங்களும் அடிப்படையானவைகள் ஆகும்[8].

சூடுபடுத்தும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு சிதைவடைந்து நைட்ரசன் ஈராக்சைடாக உருவாகிறது[9]

அமைப்பு

தொகு

முச்சரிவு படிக அமைப்பில் பிசுமத்(III) நைட்ரேட்டு காணப்படுகிறது. மற்றும் இது 10 Bi3+ ஒருங்கிணைப்புகளைக் கொண்டுள்ளது., (மூன்று இரட்டை நைட்ரேட்டு அயனிகள் மற்றும் நான்கு தண்ணீர் மூலக்கூறுகள்).[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lazarini, F. (15 August 1985). "Redetermination of the structure of bismuth(III) nitrate pentahydrate, Bi(NO3)3.5H2O". Acta Crystallographica Section C Crystal Structure Communications 41 (8): 1144–1145. doi:10.1107/S0108270185006916. 
  2. "Normal Bismuth Nitrate, Bi(NO3)3".
  3. Mary Eagleson (1994). Concise encyclopedia chemistry. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  5. Rich, Ronald (2007). Inorganic Reactions in Water (e-book). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-73962-3.
  6. Lazarini, F. (1981). "Thermal dehydration of some basic bismuth nitrates". Thermochimica Acta 46 (1): 53–55. doi:10.1016/0040-6031(81)85076-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:00406031. 
  7. 7.0 7.1 Suzuki, Hitomi, ed. (2001). Organobismuth Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-20528-4.
  8. A.I. Vogel,(1951), Quantitative Inorganic analysis, (2d edition), Longmans Green and Co
  9. Krabbe, S.W.; Mohan, R.S. (2012). "Environmentally friendly organic synthesis using Bi(III) compounds". In Ollevier, Thierry (ed.). Topics in Current chemistry 311, Bismuth-Mediated Organic Reactions. Springer. pp. 100–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-27239-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்(III)_நைட்ரேட்டு&oldid=3581674" இலிருந்து மீள்விக்கப்பட்டது