தாமிர(II) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

தாமிர(II) நைட்ரேட்டு (Copper(II) nitrate), Cu(NO3)2 என்ற வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது நீல நிறப் படிகம் ஆகும். நீரற்ற காப்பர் நைட்ரேட்டானது அடர் ஊதா-பச்சை நிறத்தை உடையது மற்றும் வெற்றிடத்தில், 150-200 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது .[3] தாமிர நைட்ரேட்டு ஐந்து வெவ்வேறான ஆண்டுகளாக காணப்படுகிறது மிகவும் பொதுவானவை மூஐதரேட்டு மற்றும் எக்சாஐதரேட்டு ஆகியவையாகும். இந்த சேர்மங்கள் ஆய்வகப்பயன்பாட்டை விட வணிகரீதியாக அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது.

தாமிர(II) நைட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிர(II) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
குப்ரிக் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
3251-23-8 Y
10031-43-3 (மூஐதரேட்டு) N
13478-38-1 (எக்சாஐதரேட்டு) N
19004-19-4 (எமிபென்டாஐதரேட்டு) N
ChEBI CHEBI:78036 N
ChemSpider 17582 Y
InChI
  • InChI=1S/Cu.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 Y
    Key: XTVVROIMIGLXTD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cu.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1
    Key: XTVVROIMIGLXTD-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18616
வே.ந.வி.ப எண் GL7875000
  • [Cu+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UNII 9TC879S2ZV Y
பண்புகள்
Cu(NO3)2
வாய்ப்பாட்டு எடை 187.5558 கி/மோல் (நீரற்ற சேர்மம்)
241.60 கி/மோல் (மூஐதரேட்டு)
232.591 கி/மோல் (எமிபென்டாஐதரேட்டு)
தோற்றம் நீல நிறப்படிகங்கள்
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 3.05 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்)
2.32 கி/செமீ3 (மூஐதரேட்டு)
2.07 கி/செமீ3 (எக்சாஐதரேட்டு)
உருகுநிலை 256 °C (493 °F; 529 K) (நீரற்ற சேர்மம், சிதைவுறுகிறது)
114.5 °செ (மூஐதரேட்டு)
26.4 °செ (எச்சாஐதரேட்டு, சிதைவுறுகிறது)
கொதிநிலை 170 °C (338 °F; 443 K) (மூஐதரேட்டு, சிதைவுறுகிறது)
trihydrate:[1]
381 கி/100 மிலி (40 °செ)
666 கி/100 மிலி (80 °செ)
hexahydrate:[1]
243.7 கி/100 மிலி (80 °செ)
கரைதிறன் எத்தனால், அமோனியா, நீர் ஆகியவற்றில் ஐதரேட்டுகள் நன்கு கரையும்; ஈத்தைல் அசிட்டேட்டில் கரைவதில்லை
+1570.0·10−6 செமீ3/மோல் (~3H2O)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம் (நீரற்ற)
சாய்சதுரம் (ஐதரேட்டுகள்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி, ஆக்சிசனேற்றி
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Cu(NO3)2·3H2O
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மிகி/மீ3 (Cu ஆக)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மிகி/மீ3 (Cu ஆக)[2]
உடனடி அபாயம்
TWA 100 மிகி/மீ3 (Cu ஆக)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மயில் துத்தம்
தாமிரம்(II) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) நைட்ரேட்டு
துத்தநாக நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாமிர நைட்ரேட்டின் தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு
 
தாமிர(II) நைட்ரேட்டின் நீர் கரைசல்

நீரேற்றப்பட்ட தாமிர நைட்ரேட்டு நீரற்ற சேர்மதை நீரேற்றம் செய்வதன் மூலமாகவோ அல்லது உலோக தாமிரத்தை வெள்ளி நைட்ரேட்டு நீர்க்கரைசலுடன் அடர் நைட்ரிக் காடி முன்னிலையில் வினை படுத்துவதன் மூலம் பெறலாம்:[4]

Cu + 4 HNO3 → Cu(NO3)2 + 2 H2O + 2 NO2

நீரற்ற Cu(NO3)2 ஆனது தாமிரம் உலோகத்தை டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் (N2O4) சேர்த்து சூடுபடுத்தும்போது பெறப்படுகிறது:

Cu + 2 N2O4 → Cu(NO3)2 + 2 NO

நீரேற்றம் செய்யப்பட்ட தாமிர நைட்ரேட்டை வெப்ப படுத்துவதன் மூலம் நீர் நீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது Cu(NO3)2 க்கு பதிலாக ஆக்சைடுகளையே தந்தது. 80 ° செல்சியசு வெப்பநிலையில், ஐதரேட்டுகள் காரத்துவம் கொண்ட தாமிர நைட்ரேட்டுகள் (Cu2(NO3)(OH)3) ஆக மாறின. 180 °செல்சியசு வெப்பநிலையில்,CuO ஆக மாறுகின்றன.[4] இந்த வினைபடு தன்மையைப் பயன்படுத்தி தாமிர நைட்ரேட்டானது சிதைவடையும் வரை வெப்பப்படுத்தப்பட்டு வெளிவரும் புகையானது நேரடியாக நீருக்குள் செலுத்தப்பட்டு நைட்ரிக் காடி தயாரிக்கப்படுகிறது. இந்த முறையானது, ஒஸ்டுவால்டு செயன்முறையில் உள்ள கடைசி படிநிலையை ஒத்தது. சமன்பாடு பின்வருமாறு:

2 Cu(NO3)2 → 2 CuO + 4 NO2 + O2
3NO2 + H2O → 2HNO3 + NO

இயற்கையான கார தாமிரா நைட்ரேட்டுகள் அரியவகை கனிமங்களான கெர்கார்டைட்டு மற்றும் ரெளயாயைட்டுகளை உள்ளடக்கியவை ஆகும். இந்த இரண்டு கனிமங்களும் Cu2(NO3)(OH)3 இன் பல் உருவ வடிவங்களாகும்.[5]

அமைப்பு

தொகு

நீரற்ற தாமிர(II) நைட்ரேட்டு

தொகு

நீரற்ற தாமிர(II) நைட்ரேட்டானது இரண்டு வரையளவற்ற பல்உருவங்களில் படிகமாக்கப்படுகின்றது.[6][7] α-மற்றும் β-Cu(NO3)2 முழுவதுமாக முப்பரிமாண அணைவு பலபடி வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளன. ஆல்பா வடிவமானது ஒரே ஒரு Cu சூழலை, [4+1] அணைவு அமைப்பையும் கொண்டுள்ளது, ஆனால் பீட்டா வடிவமானது இரண்டு தாமிர மையங்களையும் ஒரு [4+1] தள சதுர அணைவு அமைப்பையும் கொண்டுள்ளது. நைட்ரோமீத்தேன் வரையளவு "[4+ 1] அணைவு" அமைப்பிற்கும் சாதகமாக உள்ளது. இந்த அமைப்பில் நான்கு குறுகிய Cu-O பிணைப்புகள் ( தோராயமாக 200 பிகோ மீட்டர் நீளம்) மற்றும் ஒரு ஒரு நீளமான பிணைப்பு (240 பிகோமீட்டர் நீளம்) இடம் பெற்றுள்ளன.[8] இவை அணைவு ஆகும். இவற்றில் தாமிர(II) மையங்களும், நைட்ரேட்டு தொகுதிகளும் முடிவற்ற சங்கிலியாக இடம் பெற்றுள்ளன. வாயு நிலையில், தாமிர(II) நைட்ரேட்டானது இரண்டு இருமுனைய இணைப்பு நைட்ரேட்டு ஈந்தணைவிகளைக் கொண்டுள்ளது.[9]

நீரேற்றம் செய்யப்பட்ட தாமிர(II) நைட்ரேட்டு

தொகு

ஐந்து ஐதரேட்டுகள் அறியப்படுகின்றன: ஒற்றை ஐதரேட்டு (Cu(NO3)2·H2O),[7] செஸ்கியூஐதரேட்டு(Cu(NO3)2·1.5H2O), எமிபென்டாஐதரேட்டு (Cu(NO3)2·2.5H2O),[10] மூஐதரேட்டு(Cu(NO3)2·3H2O),[11] மற்றும் ஒரு எக்சாஐதரேட்டு([Cu(H2O)6](NO3)2).[12] எக்சா ஐதரேட்டு ஒரு ஆச்சரியமூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஜென்மத்தில் Cu-O பிணைப்பு நீளங்கள் அனைத்தும் சமமாக உள்ளன. இது எண்முகி வடிவ Cu(II) அணைவுச் சேர்மங்களின் குணாதிசயமான வழக்கமான ஜான் டெல்லர் விளைவின் காரணமான அமைப்பு சீர்குலைவைனை உணர்த்துவதாக இல்லை. இந்த இந்த விளைவற்ற தன்மை வலிமையான ஐதரசன் பிணைப்பு காரணமாக Cu-O பிணைப்புகளின் மீட்சி தன்மையை வரையறைக்குள் கொணர்வதால் ஏற்படுவதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Perrys' Chem Eng Handbook, 7th Ed
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Pass and Sutcliffe (1968). Practical Inorganic Chemistry. London: Chapman and Hall.
  4. 4.0 4.1 H.Wayne Richardson "Copper Compounds" Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a07_567.
  5. Mindat, http://www.mindat.org/min-10588.html
  6. Wallwork, S. C.; Addison, W. E. (1965). "The crystal structures of anhydrous nitrates and their complexes. Part I. The α form of copper(II) nitrate". J. Chem. Soc. 1965: 2925–2933. doi:10.1039/JR9650002925. 
  7. 7.0 7.1 Troyanov, S. I.; Morozov, I. V.; Znamenkov, K. O.; Yu; Korenev, M. (1995). "Synthesis and X-Ray Structure of New Copper(II) Nitrates: Cu(NO3)2·H2O and ?-modification of Cu(NO3)2". Z. Anorg. Allg. Chem. 621: 1261–1265. doi:10.1002/zaac.19956210727. 
  8. Duffin, B.; Wallwork, S. C. (1966). "The crystal structure of anhydrous nitrates and their complexes. II. The 1:1 copper(II) nitrate-nitromethane complex". Acta Crystallographica 20 (2): 210–213. doi:10.1107/S0365110X66000434. 
  9. LaVilla, R. E.; Bauer, S. H. (1963). "The Structure of Gaseous Copper(II) Nitrate as Determined by Electron Diffraction". J. Am. Chem. Soc. 85 (22): 3597–3600. doi:10.1021/ja00905a015. 
  10. Morosin, B. (1970). "The crystal structure of Cu(NO3)2.2.5H2O". Acta Crystallogr B26: 1203–1208. doi:10.1107/S0567740870003898. 
  11. J. Garaj, Sbornik Prac. Chem.-Technol. Fak. Svst., Cskosl. 1966, pp. 35–39.
  12. Zibaseresht, R.; Hartshorn, R. M. (2006). "Hexaaquacopper(II) dinitrate: absence of Jahn-Teller distortion". Acta Crystallogr E62: i19–i22. doi:10.1107/S1600536805041851. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர(II)_நைட்ரேட்டு&oldid=3384656" இலிருந்து மீள்விக்கப்பட்டது