செனான் நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

செனான் நைட்ரேட்டு (Xenon nitrate) என்பது (Xe(NO3)
2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனான் டைபுளோரைடுடன் நீரற்ற நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிலைத்தன்மையற்ற இச்சேர்மம் உருவாகி மறைகிறது. செனான் புளோரைடு நைட்ரேட்டு என்ற ஒற்றை நைட்ரேட்டைத் தயாரிக்கவும் ஆராயவும் முடிகின்ற அதேவேளையில் செனான் டைநைட்ரேட்டை தனித்துப் பிரிக்கவும் விவரிக்கவும் இயல்வதில்லை.

தயாரிப்பு தொகு

செனான் நைட்ரேட்டு பல உற்பத்தி முயற்சிகள் கீழ்கண்ட முறையில் அமைகின்றன:[1]

XeF2 + 2HNO3 → Xe(NO3)2 + 2HF[2][3]

இவ்வேதி வினையில் செம்பழுப்பு நிறத்தில் உருவாகும் திண்மம் 23 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும்போது தற்காலிகமாக நீல நிறமாக மாறுகிறது.[2]

இருந்தபோதிலும் இது விரைவாக சிதைவடைகிறது.: Xe(NO3)2 → Xe + O2NOONO2 (நிலைத்தன்மையற்ற ஒரு நைட்ரசன் பெராக்சைடு) என்றாலும் ஒரு கலப்பு நைட்ரேட்டு கண்டிப்பாக இங்கு உள்ளது, FXeONO2.[1]. புளோரோசெனோனியம் நைட்ரேட்டு என்ற பெயராலும் [4] செனான் புளோரைடு நைட்ரேட்டு.[5] என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.

கீழ்கண்ட வினை வழியாக இவை உருவாகின்றன :[1] [FXeOXeFXeF][AsF6] + 2NO2F → FXeONO2 +NO2AsF6. FXeONO2 சேர்மத்தை தூய்மையாக்க இதை SO2ClF இல் கரைக்க வேண்டும். நைட்ரோனியம் ஆர்சனிக் எக்சாபுளோரைடு திண்மமாக வீழ்படிவாகிறது.[1] செனான் டைபுளோரைடு சேர்மத்தை நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு கரைசலில் கரைத்து FXeONO2 சேர்மத்தை மாற்று தயாரிப்பு முறையில் தயாரிக்கலாம். இம்முறையில் குறைவான அளவிலேயே விளைபொருள் உருவாகிறது [1] XeF2 + NO+ + NO3 → FXeONO2 + NOF at 0 °C இத்தயாரிப்பு முறை ஒரு திறனற்ற தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் நீர்மத்தில் போதுமான அளவுக்கு நைட்ரேட்டு அயனி இருப்பதில்லை. மேலும் செனான் நைட்ரேட்டு சிதைவடைந்து மறைகிறது.[1] XeF2 + HNO3 → FXeNO3 + HF மேற்கண்ட தயாரிப்பு முறையிலும் இச்சேர்மம் தயாரிக்கப் படுகிறது:[1].

பண்புகள் தொகு

புளோரோசெனோனியம் நைட்ரேட்டு வெண்மை நிறங்கொண்ட ஒரு படிகப்பொருளாகும். ஒற்றை சரிவச்சு கட்டமைப்பில் உள்ள இச்சேர்மத்தின் படிகங்கள் P21/c என்ற இடக்குழுவை ஏற்றுள்ளன. அலகுக்கூட்டில் நான்கு மூலக்கூறுகள் 386.6 Å3 என்ற ஒட்டுமொத்த கன அளவில் காணப்படுகின்றன. a=4.6663, b=8.799 Å c=9.415 Å மற்றும் செங்குத்துக் கோடல்லாத கோண அளவுகள் β=90.325° , α மற்றும் γ = 90° என்பவை இதன் கள அளவுகளாகும்[1]. படிகத்தின் அடர்த்தி அளவு 3.648 என்றும் மூலக்கூற்று எடை அளவு 212.3 எனவும் -173 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன[1]. செனான் மற்றும் புளோரின் அணுக்களுக்கிடையில் 1.992 Å பிணைப்பு இடைவெளியும், செனான் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கிடையில் 2.126 Å பிணைப்பு இடைவெளியும், ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்களுக்கிடையில் 1.36 Å பிணைப்பு இடைவெளியும், மற்ற நைட்ரேட்டு ஆக்சிசன் பிணைப்புகள் 1.199 (ஒருபக்கம்) மற்றும் 1.224 Å (மறுபக்கம்) அளவுகளையும் கொண்ட மூலக்கூறுகளாக உள்ளன[1]. FXeO 177.6°, XeON 114.7°, (Xe)ONO 114.5° (ஒருபக்கம்), மற்றவை (Xe)ONO 118.4° (மறுபக்கம்) மற்றும் (Xe-அல்லாத)ONO அளவு 127.1° என்பவை பிணைப்புக் கோண அளவுகளாகும்[1]. செனான் அணுவின் மீதுள்ள பிணைப்பு நீளங்களும் கோணங்களும் FXeOSO2F மற்றும் FXeOTeF5 சேர்மங்களில் காணப்படுவதைப் போலவே உள்ளன. முனைவு ஆக்சிசன் பிணைப்பின் இருப்பை இந்த அளவுகள் உணர்த்துகின்றன. செனான்-ஆக்சிசன்–நைட்ரசன் பிணைப்பு கோணம் ஆலசன் நைட்ரேட்டுகளின் கோணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. இவ்வேறுபாடு செனான் ஆக்சிசன் பிணைப்பின் குறைந்த பிணைப்பு அடர்த்தியை வெளிப்படுத்துகின்றன. N-O ஒருபக்க பிணைப்பு நீளம் மற்ற ஆலசன் நைட்ரேட்டுக்கு எதிரான N-O மறுபக்க பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டதாக உள்ளது[1]. FXeONO2 சேர்மம் நிலைப்புத்தன்மை அற்றதல்ல. -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் மெதுவாக இது XeF2.N2O4 ஆக உடைகிறது. இச்சிதைவு பல நாட்கள் அளவில் நிகழ்கிறது[1]. 0 °பாகை செல்சியசு வெப்பநிலையில் FXeONO2 ஏழுமணி நேரம் என்ற அரை ஆயுட்கால அளவில் சிதைந்து XeF2 என்று மாறுகிறது[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 Moran, Matthew D. (2007). Synthesis and Structural Characterization of new Xenon(II) Compounds and the Use of a Xenon(II) Cation as an Oxidant for the Preparation of Halogenated Hydrocarbons (PDF). McMaster University. pp. 42, 99–145. பார்க்கப்பட்ட நாள் 4 Oct 2014.
  2. 2.0 2.1 Eisenberg, Max; Darryl D. DesMarteau (1970). "The reaction of xenon difluoride with some strong oxy-acids". Inorganic and Nuclear Chemistry Letters 6 (1): 29–34. doi:10.1016/0020-1650(70)80279-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. 
  3. Zefirov, N. S; Gakh, A. A.; Zhdankin, V. V.; Stang, P. J. (1991). "Interaction of Fluoroxenonium Triflate, Fluorosulfate, and Νitrate with Alkenes. Stereochemical Evidence for the Electrophilic Noble Gas Cation Addition to the Carbon-Carbon Double Bond". J. Org. Chem. 56: 1416–1418. doi:10.1021/jo00004a015. 
  4. Atta-ur-Rahman (2006-01-01). Advances in Organic Synthesis: Modern Organofluorine Chemistry-Synthetic Aspects. Bentham Science Publishers. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781608051984. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  5. Moran, Matthew D.; David S. Brock; Hélène P. A. Mercier; Gary J. Schrobilgen (2010). "Xe3OF3+, a Precursor to a Noble-Gas Nitrate; Syntheses and Structural Characterizations of FXeONO2, XeF2•HNO3, and XeF2•N2O4". Journal of the American Chemical Society 132 (39): 13823–13839. doi:10.1021/ja105618w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:20843046. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_நைட்ரேட்டு&oldid=3384652" இலிருந்து மீள்விக்கப்பட்டது