புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு (Plutonium (IV) nitrate) என்பது Pu(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு நீரில் கரைந்து அடர் பச்சை நிற நீரேற்றுப் படிகங்களாக படிகமாகிறது.[1][2]

புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் டெட்ராநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
13823-27-3 Y
53745-09-8 (238Pu) Y
13968-56-4 Y
55252-44-3 (நீரேற்று) Y
159472-02-3 Y
61204-24-8 Y
InChI
  • InChI=1S/4NO3.Pu/c4*2-1(3)4;/q4*-1;+4
    Key: XOQIPTFXWRJKPQ-UHFFFAOYSA-N
  • InChI=1S/4NO3.5H2O.Pu/c4*2-1(3)4;;;;;;/h;;;;5*1H2;/q4*-1;;;;;;+4
    Key: OHJOWNGCXJSPGF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 150308
129762960
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Pu+4]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.[Pu+4]
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை 492.02
தோற்றம் அடர் பச்சை படிகங்கள் (நீரேற்றுகள்)
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

புளுட்டோனியம்(IV) சேர்மத்தை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து கரைசலை ஆவியாக்கினால் Pu(NO3)4•5H2O பல நாட்களுக்குப் பின்னர் அடர் பச்சை நிறமும் கருப்பும் பச்சையும் கொண்ட படிகங்கள் உருவாகின்றன.[3][4]

இயற்பியல் பண்புகள்

தொகு

Pu(NO3)4•5H2O—என்ற உட்கூறுகளுடன் முறையே F dd2, a = 1.114 நானோமீட்டர், b = 2.258 நானோமீட்டர், c = 1.051 நானோமீட்டர், Z = 8. என்ற இடக்குழு, அலகு அளவுருக்களுடன் அடர் பச்சை நிறத்தில் படிக நீரேற்றாக புளுட்டோனியம்(IV) நைட்ரேட்டு காணப்படுகிறது.

படிக நீரேற்றானது 95-100 பாகை செல்சியசு வெப்பநிலையில் படிகநீரில் உருகத் தொடங்கும்.

நைட்ரிக் அமிலத்தில் நன்றாக கரைந்து அடர் பச்சை நிறக் கரைசலைக் கொடுக்கும். தண்ணீரில் கரைந்து பழுப்பு நிறக் கரைசலாகும். கரிமக் கரைப்பான்களான அசிட்டோன் மற்றும் ஈதரிலும் கரையும்.

வேதிப் பண்புகள்

தொகு

150-180 பாகை செல்சியசு வரை சூடாக்கப்படும் போது புளுட்டோனியம்(VI) ஆக தன்னியக்க ஆக்சிசனேற்றத்துடன் சிதைந்து புளுட்டோனைல் நைட்ரேட்டு (PuO2(NO3)2) ஆக உருவாகிறது.

புளுட்டோனியம் நைட்ரேட்டு மற்றும் கார உலோக நைட்ரேட்டுகளின் செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலக் கரைசல்களை ஆவியாகும்போது, Me2[Pu(NO3)6] சேர்மத்தின் இரட்டை நைட்ரேட்டுகள் உருவாகின்றன. இங்கு Me = Cs+, Rb+, K+, Tl+, NH4+ போன்ற சீரிக் அம்மோனியம் நைட்ரேட்டுக்கு ஒப்பானவைகள் இடம்பெறுகின்றன.

நச்சு

தொகு

புளூட்டோனியம் நைட்ரேட்டின் அதிக கரைதிறன் காரணமாக இது கதிரியக்க மற்றும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Allen, P. G.; Veirs, D. K.; Conradson, S. D.; Smith, C. A.; Marsh, S. F. (January 1996). "Characterization of Aqueous Plutonium(IV) Nitrate Complexes by Extended X-ray Absorption Fine Structure Spectroscopy". Inorganic Chemistry 35 (10): 2841–2845. doi:10.1021/ic9511231. https://pubs.acs.org/doi/10.1021/ic9511231. பார்த்த நாள்: 16 August 2021. 
  2. Kubic, William; Jackson, J. (9 March 2012). "A thermodynamic model of plutonium (IV) nitrate solutions". Journal of Radioanalytical and Nuclear Chemistry 293 (2): 601–612. doi:10.1007/s10967-012-1703-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1588-2780. https://akjournals.com/view/journals/10967/293/2/article-p601.xml. பார்த்த நாள்: 16 August 2021. 
  3. Baroncelli, F.; Scibona, G.; Zifferero, M. (1 November 1962). "The extraction of Pu(IV) nitrate by long chain tertiary amines nitrates" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 24 (5): 541–546. doi:10.1016/0022-1902(62)80241-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190262802413. பார்த்த நாள்: 16 August 2021. 
  4. Nakahara, Masaumi; Kaji, Naoya; Yano, Kimihiko; Shibata, Atsuhiro; Takeuchi, Masayuki; Okano, Masanori; Kuno, Takehiko (2013). "Nitric Acid Concentration Dependence of Dicesium Plutonium(IV) Nitrate Formation during Solution Growth of Uranyl Nitrate Hexahydrate". Journal of Chemical Engineering of Japan. pp. 56–62. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1252/jcej.12we175. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.