தோரியம்(IV) நைட்ரேட்டு
தோரியம் (IV) நைட்ரேட்டு (Thorium(IV) nitrate) என்பது Th(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அதன் நீரற்ற வடிவத்தில் இது ஒரு வெண்மையான திடப்பொருள் ஆகும். இது டெட்ரா- மற்றும் பென்டா ஐதரேட்டுகளை உருவாக்கலாம் . தோரியத்தின் சேர்மமான இது பலவீனமான கதிரியக்கத் தன்மை கொண்டது .
இனங்காட்டிகள் | |
---|---|
13823-29-5 (நீரற்ற சேர்மம்) 87174-21-8 (மூஐதரேட்டு) 13470-07-0 (டெட்ராஐதரேட்டு) 14767-04-5 (பென்டாஐதரேட்டு) 23739-44-8 (எக்சாஐதரேட்டு) | |
பண்புகள் | |
Th(NO3)4 | |
வாய்ப்பாட்டு எடை | 480.066 (நீரற்ற சேர்மம்) 552.130 (டெட்ராஐதரேட்டு) 570.146 (பென்டாஐதரேட்டு) 588.162 (எக்சாஐதரேட்டு) |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 55 |
கொதிநிலை | சிதைவுறுகிறது. |
கரையக்கூடியது[1] | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | O N |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதோரியம் (IV) ஐதராக்சைடு மற்றும் நைட்ரிக் அமிலத்தின் வினை மூலம் தோரியம் (IV) நைட்ரேட்டுஐதரேட்டு தயாரிக்கப்படலாம்:
- Th(OH)4 + 4 HNO3 + 3 H2O → Th(NO3)4 • 5H2O.
வெவ்வேறு நிலைகளில் படிகமாக்குவதன் மூலம் வெவ்வேறு ஐதரேட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு கரைசலானது மிகவும் நீர்த்துப்போகும்போது, நைட்ரேட்டானது நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக பல்வேறு ஐதரேட்டுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், சில வழங்குநர்கள் அவற்றை சேமித்து வைப்பதாகக் கூறினாலும், டெட்ராஐதரேட்டு மற்றும் பென்டாஐதரேட்டு மட்டுமே உண்மையில் கிடைக்கப்பெறுகின்றன. ஒரு நடுநிலையான கரைசலில் இருந்து படிகப்படுத்தப்பட்டு எக்சாஐதரேட்டு என்று அழைக்கப்படுவது அநேகமாக ஒரு கார உப்பு ஆகும்.[2]
பென்டாஐதரேட்டு மிகவும் பொதுவான வடிவம் ஆகும். நீர்த்த நைட்ரிக் அமிலக் கரைசலில் இருந்து இது படிகப்படுத்தப்படுகிறது.[3]
டெட்ராஐதரேட்டு, Th(NO3)4• 4H2O ஒரு வலுவான நைட்ரிக் அமிலக் கரைசலில் இருந்து படிகமாக்கப்படுவதன் மூலம் உருவாகிறது. நைட்ரிக் அமிலத்தின் செறிவுகள் 4 முதல் 59% வரையில் இருந்தால் டெட்ராஐதரேட்டு உருவாதலை விளைவிக்கின்றன.[4] தோரியம் அணுவின் அணைவு எண் 12 ஆக உள்ளது, நான்கு ஈரிணைப்பினைக் கொண்ட நைட்ரேட்டு தொகுதிகள் மற்றும் நான்கு நீர் மூலக்கூறுகள் ஆகியவை ஒவ்வொரு தோரியம் அணுவுடனும் இணைக்கப்பட்டுள்ளன.[2]
நீரற்ற தோரியம் (IV) நைட்ரேட்டைப் பெற, Th(NO3)4·2N2O5 சேர்மமானது வெப்பத்தால் சிதைவிற்கு உட்படுத்தபப்படுகிறது. 150-160° செல்சியசு வெப்பநிலையில் சிதைவு நிகழ்கிறது [5]
பண்புகள்
தொகுநீரற்ற தோரியம் நைட்ரேட்டு ஒரு வெண்ணிறத் திண்மப் பொருள் ஆகும். இது குறைந்த உருகுநிலையுடன் (55° செல்சியசு) சகப்பிணைப்பினால் பிணைக்கப்பட்டதாக இருக்கிறது.
வேதி வினைகள்
தொகுதோரியம் நைட்ரேட்டுபென்டாஐதரேட்டானது வெப்பப்படுத்தப்படும் போது, குறைந்த நீர் மூலக்கூறுகள் கொண்ட தோரியம் நைட்ரேட்டானது தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த சேர்மங்கள் சிறிது நைட்ரட்டையும் இழக்கின்றன. 140 °செல்சியசு வெப்பநிலையில் ஒரு கார நைட்ரேட்டானது, ThO(NO3)2 உருவாகிறது. வலிமையாக வெப்பப்படுத்தும் போது தோரியம் டையாக்சைடு உருவாகிறது.
ஐதரசன் பெராக்சைடு தோரியம் நைட்ரேட்டுடன் நீர்த்த நைட்ரிக் அமிலக் கரைசலில் வினைபுரியும் போது ஒரு பலபடி பெராக்சிநைட்ரேட்டை வீழ்படிவாகத் தருகிறது. அந்த பலபடியின் மூலக்கூறு வாய்ப்பாடு Th6(OO)10(NO3)4 •10H2 O ஆகும்.
தோரியம் நைட்ரேட்டு கரைசல்கள் நீராற்பகுப்படைந்து கார நைட்ரேட்டுகளைத் தருகின்றது. Th2(OH)4(NO3)4•xH2O and Th2(OH)2(NO3)6•8H2O. In crystals of Th2(OH)2(NO3).6•8H2O ஓரிணை தோரியம் அணுக்கள் இரண்டு ஆக்சிசன் அணுக்கள் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோரியம் அணுவும் மூன்று ஈரிணைப்பு நைட்ரேட்டு தொகுதிகள் மற்றும் மூன்று நீர் மூலக்கூறுகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் இத்தனிமம் அணைவு எண்ணைக் கொண்டுள்ளது.
ஆக்சாலிக் அமிலம் தோரியம் நைட்ரேட்டுடன் சேர்க்கப்படும் போது, கரையாத தோரியம் ஆக்சலேட்டு வீழ்படிவாகிறது.[6] அடிபிக் அமிலம், மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம், பினைல்அசிட்டிக் அமிலம், வேலரிக் அமிலம் ஆகியவற்றுடன் தோரிய நைட்ரேட்டு சேர்க்கப்படும் போது கரிம உப்புகளைத் தருகின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ New Jersey Department of Health. Thorium Nitrate. Hazardous Substance Fact Sheet, 1987
- ↑ 2.0 2.1 Katz, Joseph j.; Seaborg, Glenn t. (2008). The Chemistry of the Actinide and Lanthanide Elements. Springer. pp. 106–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2.
- ↑ Herrmann, W. A.; Edelmann, Frank T.; Poremba, Peter (1999). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry, Volume 6, 1997: Volume 6: Lanthanides and Actinides (in ஜெர்மன்). Georg Thieme Verlag. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131794611.
- ↑ Benz, R.; Naoumidis, A.; Brown, D. (2013-11-11). Th Thorium: Supplement Volume C 3 Compounds with Nitrogen (in ஆங்கிலம்). Springer Science & Business Media. pp. 70–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662063309.
- ↑ JR Ferraro, LI Katzin, G Gibson. The Reaction of Thorium Nitrate Tetrahydrate with Nitrogen Oxides. Anhydrous Thorium Nitrate. Journal of the American Chemical Society, 1955, 77(24):139-140
- ↑ Bagnall, Kenneth W. (2013-12-12). Th Thorium: Compounds with Carbon: Carbonates, Thiocyanates, Alkoxides, Carboxylates (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662063156.
- ↑ Bagnall, Kenneth W. (2013-12-12). Th Thorium: Compounds with Carbon: Carbonates, Thiocyanates, Alkoxides, Carboxylates (in ஆங்கிலம்). Springer Science & Business Media. pp. 66, 73, 74, 105, 107, 113, 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662063156.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |