அடிபிக் அமிலம்
அடிபிக் அமிலம் (Adipic acid) என்னும் இந்தக் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: (CH2)4(COOH)2. தொழிலகங்களின் நோக்கில் அடிபிக் அமிலம் மிகவும் முக்கியமான டைகார்பாக்சிலிக் அமிலமாகும்: ஆண்டுதோறும், 2.5 பில்லியன் கிலோகிராம் அடிபிக் அமில வெண் படிகத் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை முக்கியமாக, நைலான் உற்பத்தியில் முன்னோடிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றபடி, அடிபிக் அமிலம் இயற்கையில் அரிதாகக் கிடைக்கிறது.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஹெக்சேன்டையோயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
ஹெக்சேன்-1,6-டையோயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
124-04-9 | |
ChEBI | CHEBI:30832 |
ChEMBL | ChEMBL1157 |
ChemSpider | 191 |
EC number | 204-673-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | D08839 |
பப்கெம் | 196 |
| |
UNII | 76A0JE0FKJ |
பண்புகள் | |
C6H10O4 | |
வாய்ப்பாட்டு எடை | 146.14 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகம் (முப்பரிமாணம்)[1] |
அடர்த்தி | 1.36 கி/செமீ3 |
உருகுநிலை | 152.1 °C (305.8 °F; 425.2 K) |
கொதிநிலை | 337.5 °C (639.5 °F; 610.6 K) |
ஒரு சீராகக் கரையும்[2] | |
காடித்தன்மை எண் (pKa) | 4.43, 5.41 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | நமைச்சல் காரணி (Xi) |
R-சொற்றொடர்கள் | R36 |
தீப்பற்றும் வெப்பநிலை | 196 °செ |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3600 மிகி/கிகி (எலி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
டைகார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
குளுடாரிக் அமிலம்; பிமெலிக் அமிலம் |
தொடர்புடைய சேர்மங்கள் | ஹெக்சனோயிக் அமிலம்; அடிபிக் அமிலம் டைஹைட்ரசைட் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவரலாற்று நோக்கில், அடிபிக் அமிலம் பல்வேறு கொழுப்புகளை உயிர்வளியேற்றம் அடையச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது. அடிபிக் அமிலம், சைக்ளோஹெக்சனோல் மற்றும் சைக்ளோஹெக்சனோன் கலவையிலிருந்து ["KA எண்ணெய்"; K-கீட்டோன், A-ஆல்கஹால்) தற்போது தயாரிக்கப்படுகின்றது. "KA எண்ணெய்" பலபடி வழிமுறையில் நைட்ரிக் அமிலத்தால் உயிர்வளியேற்றம் செய்யப்படுவதால் அடிபிக் அமிலம் கிடைக்கிறது. வினையின் ஆரம்பக் கட்டத்தில் சைக்ளோஹெக்சனோல் கீட்டோனாக மாற்றப்படும்போது நைட்டிரஸ் அமிலம் வெளிபடுகிறது:
- HOC6H11 + HNO3 → OC6H10 + HNO2 + H2O
இவ்விதம் நடைபெறும் பல்வேறு வினைகளில், சைக்ளோஹெக்சனோன் நைட்ரசோ (-N=O) சேர்மமாக மாற்றப்பட்டு, C-C பிணைப்பு பிளவுறும் நிலையை உருவாக்குகிறது:
- HNO2 + HNO3 → NO+NO3- + H2O
- OC6H10 + NO+ → OC6H9-2-NO + H+
இம்முறையில் குளுடாரிக் மற்றும் சக்சினிக் அமிலங்கள் பக்க விளை பொருட்களாகக் கிடைக்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://onlinelibrary.wiley.com/doi/10.1002/recl.19410600805/abstract
- ↑ Gaivoronskii, A. N.; Granzhan, V. A. (2005), "Solubility of Adipic Acid in Organic Solvents and Water", Russian Journal of Applied Chemistry, 78 (3): 404–08, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s11167-005-0305-0
- ↑ 3.0 3.1 Musser, M. T. (2005), "Adipic Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01+269