இரும்பு(III) நைட்ரேட்டு

இரும்பு(III) நைட்ரேட்டு அல்லது பெர்ரிக் நைட்ரேட்டு (Iron(III) nitrate, or ferric nitrate) என்பது Fe(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீருறிஞ்சியாக இருப்பதால் இச்சேர்மம் பொதுவாக Fe(NO3)3•9H2O என்ற வேதிவாய்பாடுடன் காணப்படுகிறது. நீரேற்று வடிவத்தில் இது நிறமற்றது முதல் வெளிர் ஊதாநிற படிகங்களாகக் காணப்படுகிறது.

இரும்பு(III) நைட்ரேட்டு
Iron(III) nitrate
Iron(III) nitrate nonahydrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
பெர்ரிக் நைட்ரேட்டு
நைட்ரிக் அமிலத்தின் இரும்பு(3+) உப்பு
இனங்காட்டிகள்
10421-48-4 Y
13476-08-9 (அறுநீரேற்று) N
7782-61-8 (ஒன்பது நீரேற்று) N
ChemSpider 10670706 Y
InChI
  • InChI=1S/Fe.3NO3.9H2O/c;3*2-1(3)4;;;;;;;;;/h;;;;9*1H2/q+3;3*-1;;;;;;;;; Y
    Key: SZQUEWJRBJDHSM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Fe.3NO3.9H2O/c;3*2-1(3)4;;;;;;;;;/h;;;;9*1H2/q+3;3*-1;;;;;;;;;
    Key: SZQUEWJRBJDHSM-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 168014
வே.ந.வி.ப எண் NO7175000
  • [Fe+3].O.O.O.O.O.O.O.O.O.O=[N+]([O-])[O-].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UNII N8H8402XOB Y
பண்புகள்
Fe(NO3)3
வாய்ப்பாட்டு எடை 241.86 கி/மோல் (நீரிலி)
403.999 கி/மோல் (ஒன்பது நீரேற்று)
தோற்றம் வெளிர் ஊதா படிகங்கள்
நீருறிஞ்சி
அடர்த்தி 1.68 கி/செ.மீ3 (அறுநீரேற்று)
1.6429 g/cm3(ஒன்பது நீரேற்று)
உருகுநிலை 47.2 °C (117.0 °F; 320.3 K) (ஒன்பது நீரேற்று)
கொதிநிலை 125 °C (257 °F; 398 K) (ஒன்பது நீரேற்று)
150 கி/100 மி.லி (அறுநீரேற்று)
கரைதிறன் ஆல்ககால், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையும்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இரும்பு உலோகத்தூளை நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்தால் இரும்பு(III) நைட்ரேட்டு உருவாகிறது.

Fe + 4 HNO3 → Fe(NO3)3 + NO + 2 H2O.

பயன்கள்

தொகு

ஆய்வகப் பயன்கள்

தொகு

அமோனியாவில் உள்ள சோடியம் கரைசலில் இருந்து சோடியம் அமைடு தொகுப்பு முறையில் தயாரிக்க பெர்ரிக் நைட்ரேட்டு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[1]

2 NH3 + 2 Na → 2 NaNH2 + H2

களிமண் பதிக்கப்பட்ட பெர்ரிக் நைட்ரேட்டு, கரிமத் தொகுப்பு வினைகளில் உபயோகமுள்ள ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது. உதாரணமாக,மண்ட்மோரில்லோனைட்டில் பதிந்துள்ள பெர்ரிக் நைட்ரேட்டு கிளேபன் என்ற ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. இவ்வினையாக்கியானது ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாகவும், தையால்களை இருசல்பைடுகளாகவும் மாற்றுகிறது.[2]

பிற பயன்கள்

தொகு

ஆபரணம் மற்றும் உலோகக் கொல்லர்கள் பெர்ரிக் நைட்ரேட்டு கரைசல்களை வெள்ளி மற்றும் வெள்ளி உலோக கலவைகளை அரித்து எடுக்கும் வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Hampton, K. G. Harris, T. M.; Hauser, C. R. (1973). "2,4-Nonanedione". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0848. ; Collective Volume, vol. 5, p. 848 As of 2007, 22 other entries describe similar preparations in Organic Syntheses
  2. Cornélis, A. Laszlo, P.; Zettler, M. W. "Iron(III) Nitrate–K10 Montmorillonite Clay" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(III)_நைட்ரேட்டு&oldid=2943695" இலிருந்து மீள்விக்கப்பட்டது