தைட்டானியம் நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

தைட்டானியம் நைட்ரேட்டு (Titanium nitrate) என்பது Ti(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் டயாகாந்தப் பண்பும் கொண்டதாக காணப்படும் இத்திண்மம் எளிதில் பதங்கமாகிறது. எளிதில் ஆவியாகக்கூடிய இரும இடைநிலை உலோக நைட்ரேட்டுக்கு இச்சேர்மம் ஒரு உதாரணமாகும். தைட்டானியம் அல்லது அதன் ஆக்சைடுகளை நைட்ரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் இதை தயாரிக்கலாம்.

தைட்டானியம் நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டானியம் டெட்ராநைட்ரேட்டு, டெட்ராநைட்ரேட்டோதைட்டானியம்
இனங்காட்டிகள்
12372-56-4 N
ChemSpider 8123716?
InChI
 • InChI=1S/4NO3.Ti/c4*2-1(3)4;/q4*-1;+4
  Key: QDZRBIRIPNZRSG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139314
 • [Ti](O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)(O[N+]([O-])=O)O[N+]([O-])=O
பண்புகள்
Ti(NO3)4
வாய்ப்பாட்டு எடை 295.8866 கி/மோல்
தோற்றம் வெண்மை, ஆவியாகும் திண்மம்
அடர்த்தி 2.192[1]
உருகுநிலை 58.5 °C (137.3 °F; 331.6 K)
கொதிநிலை சிதையும்
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றை சரிவச்சு
புறவெளித் தொகுதி P21/C
Lattice constant a = 7.80, b = 13.57, c = 10.34 Å
படிகக்கூடு மாறிலி
8
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

அசலான தைட்டானியம் நைட்ரேட்டு தயாரிப்பு முறை போலவே [2][3] தைட்டானியம் டெட்ராகுளோரைடு சேர்மத்தை டைநைட்ரசன் பெண்டாக்சைடைப் பயன்படுத்தி நைட்ரோயேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [4]

TiCl4 + 4 N2O5 → Ti(NO3)4 + 4 ClNO2

தைட்டானியம் சேர்மங்களை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து நீரேறிய தைட்டானியம் நைட்ரேட்டை உற்பத்தி செய்யலாம்.[5]

கட்டமைப்பு தொகு

தைட்டானியம் நைட்ரேட்டு D2d சீரொழுங்குடன் நான்கு இருபல் நைட்ரேட்டு ஈந்தணைவிகளை கொண்ட ஓர் அணைவுச் சேர்மமாகும். N-O பிணைப்புகளுக்கு இடையில் ஒருங்கிணைவற்ற 1•29 மற்றும் 1•185 Å தொலைவு இடைவெளி காணப்படுகிறது[6].

இயற்பியல் பண்புகள் தொகு

அகச்சிவப்பு நிறமாலையில் 1635 cm−1 இல் இது வலிமையாக ஈர்க்கப்பட்டு N-O பிணைப்பை அதிர்வு முறைக்கு ஒதுக்குகிறது [7]

சிலிக்கன் டெட்ராகுளோரைடு, கார்பன் டெட்ராகுளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் இது கரைகிறது [8][3].

வினைகள் தொகு

தைட்டானியம் நைட்ரேட்டு ஓர் ஈரமுறிஞ்சியாகும். ஆனால் ஒரு தெளிவற்ற நீரேற்றாகவே இது வரையறுக்கப்படுகிறது[9]. நீரிலி நிலையில் இது ஐதரோ கார்பன்களுடன் கூட வினைத்திறன் மிக்கதாக உள்ளது[9] தைட்டானியம் நைட்ரேட்டு என்-டோடெக்கேனுடன் கூட வினையில் ஈடுபடுகிறது.[10]. மேலும் இது பாரா- டைகுளோரோபென்சீன்ம் அனிசோல், பைபீனைல் போன்ற சேர்மங்களோடும் சேர்ந்து வினையில் ஈடுபடுகிறது.[10][11]

வெப்பச் சிதைவு வினையின் மூலமாக இது தைட்டானியம் ஆக்சைடாக சிதைவடைகிறது[12]

மேற்கோள்கள் தொகு

 1. "Titanium(iv) nitrate (Ti(NO3)4)". பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
 2. Reihlen, Hans; Andreas Hake (1927). "Über die Konstitution des N2O4 und N2O3 und die Additionsverbindungen von Nitro- und Nitrosokörpern an Zinn- und Titantetrachlorid" (in de). Justus Liebig's Annalen der Chemie 452 (1): 47–67. doi:10.1002/jlac.19274520104. பன்னாட்டுத் தர தொடர் எண்:0075-4617. 
 3. 3.0 3.1 Schmeisser, Martin (1955). "Die Chemie der anorganischen Acylnitrate (ein Problem des Nitrylchlorids) und Acylperchlorate (ein Problem des Dichlorhexoxyds)" (in de). Angewandte Chemie 67 (17–18): 493–501. doi:10.1002/ange.19550671708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-8249. 
 4. P. Ehrlich "Titanium Tetranitrate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1237.
 5. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Academic Press. p. 1331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
 6. Garner, C. David; Ian H. Hillier; Martyn F. Guest (1975). "Ab initio self-consistent field molecular-orbital calculation of the ground state of tetranitratotitanium(IV); comments on the reactivity of anhydrous metal nitrates". Journal of the Chemical Society, Dalton Transactions (19): 1934. doi:10.1039/DT9750001934. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246. 
 7. C. C. Addison, N. Logan, S. C. Wallwork and C. D. Garner, "Structural Aspects of Coordinated Nitrate Groups" Quart. Rev., Chem. Soc., 1971, volume 25, 289-322. எஆசு:10.1039/qr9712500289.
 8. Amos, D.W.; G.W. Flewett (1974). "Raman spectra of titanium (IV) and tin (IV) nitrates". Spectrochimica Acta Part A: Molecular Spectroscopy 30 (2): 453–461. doi:10.1016/0584-8539(74)80085-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0584-8539. Bibcode: 1974AcSpA..30..453A. 
 9. 9.0 9.1 Amos, D.W.; D.A. Baines, G.W. Flewett (1973). "Nitration by titanium (IV) nitrate". Tetrahedron Letters 14 (34): 3191–3194. doi:10.1016/S0040-4039(00)79808-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. 
 10. 10.0 10.1 Coombes, Robert G.; Leslie W. Russell (1974). "Nitration of aromatic compounds by tetranitratotitanium(IV) in carbon tetrachloride solution". Journal of the Chemical Society, Perkin Transactions 2 (7): 830. doi:10.1039/P29740000830. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9580. 
 11. Schofield, Kenneth (1980). Aromatic Nitration. CUP Archive. pp. 97–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521233620. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
 12. Allendorf, Mark Donald (1999-01-01). "Titanium Oxide CVD from Titanium (IV) Nitrate ...". Proceedings of the Symposium on Fundamental Gas-Phase and Surface Chemistry of Vapor-Phase Materials Synthesis. The Electrochemical Society. pp. 395–397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781566772174. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்_நைட்ரேட்டு&oldid=2802394" இலிருந்து மீள்விக்கப்பட்டது