குளோரின் நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

குளோரின் நைட்ரேட்டு (Chlorine nitrate) என்பது ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படைமண்டலத்தில் உள்ள முக்கியமான வளிமண்டல வாயுவாகும். ஓசோன் சுருங்குதலுக்கு காரணமாகும் முக்கியமான ஓர் குளோரின் சேர்மமாகவும் இது விளங்குகிறது.

குளோரின் நைட்ரேட்டு
Ball and stick model of chlorine nitrate
Ball and stick model of chlorine nitrate
Spacefill model of chlorine nitrate
Spacefill model of chlorine nitrate
Stick model of chlorine nitrate
Resonance stick models of chlorine nitrate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரின் நைட்ரேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
Nitryl hypochlorite
இனங்காட்டிகள்
14545-72-3
ChemSpider 102875?
InChI
  • InChI=1S/ClNO3/c1-5-2(3)4
    Key: XYLGPCWDPLOBGP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 114934
  • ClON(=O)=O
பண்புகள்
ClNO3
வாய்ப்பாட்டு எடை 97.46
அடர்த்தி 1.65 கி/செ.மீ3
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T
அரிக்கும் C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உலோகங்கள், உலோக குளோரைடுகள், ஆல்ககால்கள், ஈதர்கள் மற்றும் பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் ஆகியனவற்றுடன் வெடிக்கும் இயல்புடன் இச்சேர்மம் வினைபுரிகிறது. சிதைவடையும் வகையில் குளோரின் நைட்ரேட்டைச் சூடுபடுத்தும் போது குளோரின் நைட்ரசன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளிவிடுகிறது.

தயாரிப்பு

தொகு

இருகுளோரின் ஒராக்சைடுடன் இருநைட்ரசன் ஐந்தாக்சைடைசெல்சியசு வெப்பநிலையில் சேர்த்து வினைபுரியச் செய்யும் பொழுது குளோரின் நைட்ரேட்டு உருவாகிறது.

Cl2O + N2O5 → 2 ClONO2

வினைகள்

தொகு

ஆல்க்கீன்களுடன் இச்சேர்மம் வினைபுரிகிறது.

(CH3)2C=CH2 + ClONO2 → O2NOC(CH3)2CH2Cl

குளோரின் நைட்ரேட்டு உலோக குளோரைடுகளுடன் வினைபுரிகிறது:[1].

4 ClONO2 + TiCl4 → Ti(NO3)4 + 4 Cl2

மேற்கோள்கள்

தொகு
  1. 张青莲. 《无机化学丛书》第六卷:卤素、铜分族、锌分族. 北京: 科学出版社. pp. P338-341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-03-002238-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரின்_நைட்ரேட்டு&oldid=4138419" இலிருந்து மீள்விக்கப்பட்டது