மாங்கனீசு(II) நைட்ரேட்டு

மாங்கனீசு(II) நைட்ரேட்டு (Manganese(II) nitrate) என்பது Mn(NO3)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒவ்வொரு வாய்ப்பாட்டு அலகும், ஒரு Mn2+ நேர்மின் அயனியும் இரண்டு NO3NO3− எதிர்மின் அயனியும் சேர்ந்து உருவாகிறது. பொதுவாக நான்கு நீரேற்று வகை Mn(NO3)2·4H2O பரவலாகக் காணப்பட்டாலும் நீரிலி வகைச் சேர்மத்துடன் ஒரு நீரேற்று மற்றும் அறுநீரேற்றுகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் சில சேர்மங்கள் மாங்கனீசு ஆக்சைடு தயாரிப்பதற்கான முன்னோடிகளாக விளங்குகின்றன[1].

மாங்கனீசு(II) நைட்ரேட்டு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
மாங்கனீசு இருநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10377-66-9 Y
20694-39-7 (நான்கு நீரேற்று) Y
17141-63-8 (அறுநீரேற்று) N
EC number 233-828-8
பப்கெம் 61511
UN number 2724
பண்புகள்
Mn(NO3)2
வாய்ப்பாட்டு எடை 178.95 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி 1.536 கி/செ.மீ3
உருகுநிலை 37 °C (99 °F; 310 K)
கொதிநிலை 100 °C (212 °F; 373 K)
உயர்வு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் நைட்ரேட்டு
கால்சியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

மாங்கனீசு கார்பனேட்டை நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரைத்து மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. :

MnCO3 + 2 HNO3 → Mn(NO3)2 + H2O + CO2

மாங்கனீசு ஈராக்சைடு மற்றும் நைட்ரசன் ஈராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கலாம்.

பண்புகள் தொகு

மாங்கனீசு(II) நைட்ரேட்டின் நீர்த்த கரைசல்களை 300° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது இச்சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு MnO2 மற்றும் NO2 ஆகியச் சேர்மங்களைத் தருகிறது. மேலும் அதிகமான வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் MnO2 ஆக்சிசனை இழந்து Mn2O3 மற்றும் Mn3O4. சேர்மங்களாக மாறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Arno H. Reidies, "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II)_நைட்ரேட்டு&oldid=2052937" இலிருந்து மீள்விக்கப்பட்டது