நைலான் சவ்வு
நைலான் சவ்வு (Nylon membrane) மூலக்கூற்று உயிரியலில் சதர்ன் படிவு, மற்றும் நார்தர்ன் படிவுகளில் பாவிக்கப்படும் ஒரு பொருள் ஆகும். இவைகள் குறைந்த அளவு நேர்மின்மம் கொண்டுள்ளதால் மிக எளிதாக டி.என்.ஏ, ஆர்.என்.ஏ களை கூழ்மத்தில் இருந்து மாற்றலாம். ஏனெனில் டி.என்.ஏ க்கள் எதிர்மின்மம் கொண்டுள்ளதால், மின்னோட்டம் இடும்போது விரைவாக சவ்விற்குள் மாற்றப்பட்டு படிவாகிவிடும். மேலும் நைலான் சவ்வை சூடாக்கும்போது உடையாமால் இருக்கும். மாறாக நைட்ரோ செலுலோசைச் சூடாக்கும்போது உடையும் தன்மையில் இருப்பதால் கவனத்துடன் கையாளவேண்டும். மேலும் புரதப் படிவிற்கு நைட்ரோ செல்லுலோசு மற்றும் பி.வி.டி.எப். (PVDF) என்னும் சவ்வும் பாவிக்கப்படும்.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.whatman.com/NytranNylonMembranes.aspx பரணிடப்பட்டது 2008-07-08 at the வந்தவழி இயந்திரம்