நொபொரு காராசிமா
நொபொரு காரசிமா (Noboru Karashima, 辛島昇, 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015)[1][2] சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார்.[3][4]
நொபொரு காராசிமா Noboru Karashima | |
---|---|
பிறப்பு | சப்பான் | ஏப்ரல் 24, 1933
இறப்பு | நவம்பர் 26, 2015 | (அகவை 82)
பணி | பேராசிரியர், எழுத்தாளர், வரலாற்றாளர் |
விருதுகள் | ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு பத்மசிறீ |
நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார்.[4] 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5][6]
மறைவு
தொகுஉலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார்[7]
எழுதிய நூல்கள்
தொகு- Ancient Medieval South Indian Society in Transition (Oxford Collected Essays)-2010
- A Concise History of South India: Issues and Interpretations (2014)
- A Concordance of Nayakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
- Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1993)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil scholar who inspired a generation". தி இந்து. 27 November 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்". பிபிசி தமிழ். 26 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
- ↑ 4.0 4.1 http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
- ↑ "List of Padma Awardees" (PDF) (pdf). Ministry of Home Affairs, India. Archived from the original (PDF) on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
- ↑ ஜப்பானிய தமிழறிஞருக்கு "பத்மஸ்ரீ' விருது, தினமணி, 29 மே 2013
- ↑ ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார்
வெளியிணைப்புகள்
தொகு- NOBORU KARASHIMA (1933-2015) - Tamil scholar who inspired a generation
- இந்திய பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர், இந்த வார கலாரசிகன், தினமணி, 2 சூன் 2013