நோபிலைட்டு


நோபிலைட்டு (Nobleite) என்பது CaB6O9(OH)2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இதுவோர் அரிய போரேட்டுக் கனிமமாகும். 1961 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாவுப் பள்ளத்தாக்கில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் புவியியலாளர் இலெவி எப் நோபில் இக்கனிமத்தைக் கண்டறிந்தார் என்பதால் கனிமத்திற்கு நோபிலைட்டு என்று பெயரிடப்பட்டது. இவர் சாவுப் பள்ளத்தாக்குப் பகுதியின் நிலவியலுக்குப் பெரிதும் பாடுபட்டார்.

நோபிலைட்டு
Nobleite
பொதுவானாவை
வகைபைலோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCaB6O9(OH)2·3H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

சிலி, அர்கெந்தினா நாடுகளிலும் நோபிலைட்டு கனிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் நோபிலைட்டு கனிமத்தை Nob[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோபிலைட்டு&oldid=4132825" இலிருந்து மீள்விக்கப்பட்டது