நோர்வீயக் கடல்
நோர்வீயக் கடல் (Norwegian Sea, நோர்வே: Norskehavet) நோர்வேயின் வடமேற்கிலுள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல். இது வட கடலுக்கும் (ஐக்கிய இராச்சியத்திற்கு வடக்கில்) கிரீன்லாந்து கடலுக்கும் இடையில் வடகிழக்கில் பேரன்ட்சு கடலை அடுத்தும் அமைந்துள்ளது. தென்மேற்கே, ஐசுலாந்திற்கும் பராயே தீவுகளுக்கும் இடையே உள்ள கடலடி முகட்டால் அத்தலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் கிரீன்லாந்து கடலிலிருந்து ஜான் மாயென் முகடு பிரிக்கிறது.
நோர்வீயக் கடல் | |
---|---|
இசுடைகெனின் லோவோய் தீவிலிருந்து லோபோடென் தீவுக்கூட்டத்தின் மலைக்குன்றுகளுடன் வெஸ்ட்யோர்ன். | |
நோர்வீயக் கடல் சிவப்பு கோட்டால் வரையறுக்கப்பட்டுள்ளது. (செருமானியத்தில் Europäisches Nordmeer எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) | |
ஆள்கூறுகள் | 69°N 2°E / 69°N 2°E |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | நோர்வே, ஐசுலாந்து |
மேற்பரப்பளவு | 1,383,000 km2 (534,000 sq mi) |
சராசரி ஆழம் | 2,000 m (6,600 அடி) |
அதிகபட்ச ஆழம் | 3,970 m (13,020 அடி) |
நீர்க் கனவளவு | 2,000,000 km3 (1.6×1012 acre⋅ft) |
மேற்கோள்கள் | [1][2][3] |
மற்ற கடல்களைப் போலன்றி நோர்வீயக் கடலின் அடித்தளத்தின் பெரும்பகுதியும் கண்டத் திட்டின் அங்கமல்ல. எனவே சராசரியாக இரண்டு கி.மீ ஆழம் கொண்டதாக உள்ளது. இங்கு எண்ணெய் வளமும் இயற்கை எரிவளிச் சேமிப்பும் மிகுந்ததாக வணிகமுறையில் எடுக்கப்படுகின்றன. கடலோரப் பகுதிகள் மீன் பிடிப்பிற்கு உகந்ததாக உள்ளன; வட அத்திலாந்திக்கு அல்லது பேரன்ட்சு கடல் பகுதிகளிலிருந்து காட் வகை மீன்கள் முட்டையிட இங்கு வருகின்றன. வெப்பமான வட அத்திலாந்திக்கு நீரோட்டத்தால் இக்கடல் ஒப்பளவில் நிலைத்த உயர் வெப்பநிலை கொண்டதாக விளங்குகின்றது. எனவே பிற ஆர்க்டிக் கடல்களைப் போலன்றி இங்கு ஆண்டு முழுவதும் பனிப்பாறைகள் உருவாவதில்லை. இந்த ஆழ்கடலின் மிகுந்த நீர் கொள்ளளவும் தொடர்புடைய பெரும் வெப்பம் உள்வாங்கும் திறனும் நோர்வேயின் மிதமான குளிர்கால வானிலைக்கு முதன்மையாக உள்ளன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Norwegian Sea, Great Soviet Encyclopedia (உருசியத்தில்)
- ↑ Norwegian Sea, Encyclopædia Britannica on-line
- ↑ ICES, 2007, p. 1
- ↑ Westerly storms warm Norway பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம். The Research Council of Norway. Forskningsradet.no (3 September 2012). Retrieved on 2013-03-21.