பேரன்ட்ஸ் கடல்

பேரன்ட்சு கடல் (Barents Sea, நோர்வே: Barentshavet; உருசியம்: Баренцево море, Barentsevo More) ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல்.[1] இது நோர்வே, உருசியாவின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில் அமைந்துள்ளது.[2] உருசியாவில் இது முர்மன் கடல் (நோர்வீயக் கடல்) என நடுக் காலங்களில் அறியப்பட்டிருந்தது; டச்சு மாலுமி வில்லெம் பேரன்ட்சு நினைவாகத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

பேரன்ட்சு கடல்
Barents Sea map.png
பேரன்ட்சு கடலின் அமைவிடம்
Locationஆர்க்டிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்75°N 40°E / 75°N 40°E / 75; 40 (Barents Sea)ஆள்கூறுகள்: 75°N 40°E / 75°N 40°E / 75; 40 (Barents Sea)
வகைகடல்
Primary inflowsநோர்வீயக் கடல், ஆர்க்டிக் பெருங்கடல்
நீர்வள நாடுகள்நோர்வேயும் உருசியாவும்
மேற்பரப்பு பரப்பளவு1,400,000 km2 (540,000 sq mi)
சராசரி ஆழம்230 m (750 ft)
உசாத்துணைகள்கடல்சார் ஆய்வுக் கழகம், நோர்வே

இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் திட்டுக் கடல் ஆகும். மீன் பிடிப்பிற்கும் நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது.[3] பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் நோர்வீயக் கடலின் திட்டு விளிம்பும், வடமேற்கில் சுவல்பார்டு தீவுக் கூட்டங்களும், வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. உரால் மலைகளின் வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை காரா கடலிலிருந்து பிரிக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாயிருப்பினும் பேரன்ட்சு கடல் "அத்திலாந்திக்குக்கான திருப்புமுனையாக" கருதப்படுகின்றது. "ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம்" இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. புவி சூடாதலின் நீரியல் மாற்றங்களால் கடற் பனிப்பாறைகள் குறைந்துள்ளன; இது ஐரோவாசிய வானிலையில் பெரும் மாற்றங்களை விளைவிக்கக் கூடியது.[4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரன்ட்ஸ்_கடல்&oldid=2558278" இருந்து மீள்விக்கப்பட்டது