நோவாவின் பேழைப் பொறி

சதுரங்க விளையாட்டில் நோவாவின் படகுப் பொறி (Noah's Ark Trap) என்ற உத்தி உருய் உலோப்பசு திறப்பு ஆட்டத்தின் தொடக்க நிலையில் வீசப்படும் ஒரு வலை உத்தியாகும். உருய் உலோப்பசு வகை திறப்பாட்டக் குடும்பத்தில் உள்ள சதுரங்கப் பொறிகளில் இதுவும் ஒன்று என்பதைக் குறிப்பிடுவதே இப்பெயரின் நோக்கமாகும். இந்தப் பொறியில் வெள்ளை ஆட்டக்காரரின் வெள்ளை அமைச்சர் கருப்பு ஆட்டக்காரரின் சிப்பாய்களால் சூழப்பட்டு சிறை செய்யப்படுகிறார்.

abcdefgh
8
a8 black rook
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
d7 black bishop
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a6 black pawn
d6 black pawn
b5 black pawn
d5 white queen
c4 black pawn
e4 white pawn
b3 white bishop
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
11...c4.என்ற நகர்வுக்குப் பின்னர் வெள்ளை ஆட்டக்காரரன் இராசா அமைச்சர் சிறை செய்யப்படுகிறார்.

அலசல் தொகு

நோவாவின் படகுப் பொறி என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு திட்டவட்டமான காரணம் ஏதுமில்லை என்றாலும் கருப்பு ஆட்டக்காரரின் a6, b5, மற்றும் c4 சிப்பாய்கள் நிற்கும் தோரணை படகு வடிவம் போல இருக்கிறது என அர்த்தம் கொள்ளலாம் அல்லது இப்பொறி நோவாவின் பேழை போல் பழமை வாய்ந்தது என்ற பொருளைக் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சதுரங்க விளையாட்டில் வல்லுநராக இருப்பவர்கள் கூட எப்போதாவது இப்பொறியில் சிக்கித் திணறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டு புடாபெச்ட் நகரில் நடைபெற்ற எண்ட்ரே சிடெய்னர், ஒசே காபபிளாங்கா இடையிலான போட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்:[1]

1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 a6 4. Ba4 d6 5. d4
வெள்ளை ஆட்டக்காரருக்கு சிறபான நகர்வுகள் உள்ளன 5.c3, 5.Bxc6+, and 5.0-0.
5... b5 6. Bb3 Nxd4 7. Nxd4 exd4 8. Qxd4??
அலெக்சாண்டர் அலெக்கின் 1924 ஆம் ஆண்டு நியூயார்க் போட்டித் புத்தகத்தில் வெள்ளை ஆட்டக்காரர் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொள்ள வைக்கும் கோரிக்கையாக இந்த நடவடிக்கையைப் பரிந்துரைக்கிறார். ஆனால் அது ஒரு தவறான நகர்வு ஆகும். வெள்ளை அதற்கு பதிலாக 8.Bd5 என்று விளையாடலாம் அல்லது 8.c3 சிப்பாயை பலி கொடுத்து வேறு முயற்சியில் ஆட்டத்தைத் தொடராலாம்.
8... c5 9. Qd5 Be6 10. Qc6+ Bd7 11. Qd5 c4 (படம் பார்க்க)
வெள்ளை ஆட்டக்காரரின் அரசரின் அமைச்சர் சிறை செய்யப்படுகிறார். வெள்ளை ஆட்டக்காரர் 32 நகர்வுகளூக்குப் பின்னர் ஆட்டத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்கிறார்.

சிசிலியன் தற்காப்பு ஆட்டத்தில் தொகு

சிசிலியன் தற்காப்பு ஆட்டத்திலும் இது போன்ற ஒரு பொறி உத்தி நிகழ்கிறது 1.e4 c5 2.Nf3 Nc6 3.Bb5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் (உரோசோலிமோ திறப்பாட்டம்) a6 4.Ba4?? (4.Bxc6 என்பது தேவையான நகர்வு ) b5 5.Bb3 c4 (படம் பார்க்க) இங்கும் அமைச்சர் அதுபோலவே சிக்கிக் கொள்கிறார்.

  a b c d e f g h  
8                 8
7                 7
6                 6
5                 5
4                 4
3                 3
2                 2
1                 1
  a b c d e f g h  
4.Ba4?? b5 5.Bb3 c4 நகர்வுகளுக்குப் பின்னர்...

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  • Hooper, David; Whyld, Kenneth (1996), The Oxford Companion to Chess, Oxford University, p. 274, ISBN 0-19-280049-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவாவின்_பேழைப்_பொறி&oldid=1769288" இலிருந்து மீள்விக்கப்பட்டது