நோவா (காட்டெருது)

நோவா (Noah) என்பது நகலாக்கம் செய்யப்பட்ட முதல் இந்தியக் காட்டெருதுஆகும். படியெடுக்கப்பட்ட இந்த காட்டெருது பெசுலி என்ற மாட்டின் கருப்பையில் கரு வளர்ச்சி பெற்றது. காட்டெருது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. நோவா சனவரி 8, 2001-ல் பிறந்தது. ஆனால் சனவரி 10, 2001 அன்று வயிற்றுப்போக்கு காரணமாகப் பிறந்த 48 மணி நேரத்திற்குள் இறந்தது. நோவாவின் உடல்நிலையைக் கால்நடை மருத்துவர் ஜொனாதன் கில் மற்றும் இவரது குழு உறுப்பினர்கள் அயோவாவில் கண்காணித்தனர். நோவாவை படியெடுத்தல் செய்யப் பயன்படுத்தப்பட்ட செயல்முறை உட்கரு பரிமாற்ற முறை ஆகும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. BBC News. 2000. Website. Endangered species cloned. BBC. Retrieved May 31, 2008.
  2. CNN.com. 2001. Website. First cloned endangered species dies 2 days after birth பரணிடப்பட்டது 2009-06-06 at the வந்தவழி இயந்திரம். CNN.com. Retrieved May 31, 2008

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_(காட்டெருது)&oldid=4109137" இலிருந்து மீள்விக்கப்பட்டது