நோவ்ரா அல் நோமன்
நோவ்ரா அல் நோமன் ( அரபு மொழி: نورةأحمدالنومان ) ஓர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அறிவியல் புனைவு கதை எழுத்தாளர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅல் நோமன் ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார்.சார்ஜாவின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
நாவல்கள்
தொகுஇவரது முதல் நாவலான அஜ்வான் 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் 2013 ஆம் ஆண்டில் எடிசலாட் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகத்திற்கான விருதை பெற்றது.[2] "'தனது மகள் படிக்க அரபி மொழியில் இளம் வயது அறிவியல் புனைவுகதைகள் பார்க்க முடியவில்லை" என்பதால் தான் இந்த நாவலை எழுதியதாக அல் நோமன் கூறினார். மேலும் பதின்வயது புனைவுகதை மற்றும் அறிவியல் புனைவுகதை இரண்டும் அரபியில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அஜ்வான் நாவலின் தொடர்ச்சி மண்டான் என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[3]
படைப்புகள்
தொகு- குட்டா குட்னா (காட்டன் தி கிட்டன்) குழந்தைகளுக்கான விளக்கப்படம் புத்தகம் 2010, கலிமத்
- குன்ஃபுத் கிவி (கிவி தி ஹெட்ஜ்ஹாக்), குழந்தைகளுக்கான விளக்கப்படம் புத்தகம் 2010, கலிமத்
- أجوان ( அஜ்வான் ) நாவல், 2012, நஹ்தெட் மிஸ்ர் ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789771445395
- ماندان ( மண்டான்), நாவல், 2014, நஹ்தெட் மிஸ்ர்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789771447122
குறிப்புகள்
தொகு- ↑ Radan, Silvia (26 March 2013). "Abu Dhabi book fair gets bigger". Khalejj Times இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130327045227/http://khaleejtimes.com/nation/inside.asp?xfile=%2Fdata%2Fnationgeneral%2F2013%2FMarch%2Fnationgeneral_March505.xml§ion=nationgeneral. பார்த்த நாள்: 1 April 2013.
- ↑ Johnson, Alice (5 March 2012). "Science fiction for young adults expands in the UAE". The National. http://www.thenational.ae/arts-culture/books/science-fiction-for-young-adults-expands-in-the-uae#full. பார்த்த நாள்: 1 April 2013.
- ↑ Jurado, Cristina (25 March 2013). "Monday Original Content: An Interview with Noura al Noman". World SF Blog. http://worldsf.wordpress.com/2013/03/25/monday-original-content-an-interview-with-noura-al-noman/. பார்த்த நாள்: 1 April 2013.