ந. இராமசாமி

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

நடேசகணபதிகள் இராமசாமி அய்யர் (Natesaganabadigal Ramaswami Ayyar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒரு கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1896 முதல்1976 வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். கட்டுப்பாடான ஓர் இந்துக் குடும்பத்தில் 1896 ஆம் ஆண்டு பிறந்த இவர்[1], ஒரு குற்றவியல் வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் 1930 களில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை நிறுத்திவிட்டு சாவித்ரி வித்தியாலயம் என்ற பெண்கள் பள்ளியை 1938 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார். அக்காலத்தில் சமூகத்தில் பெண்கள் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது[2]. படிப்படியாக வளர்ந்த இப்பள்ளி பின்னாளில் ஒரு கல்விக் குழுமமாக விரிவடைந்தது. சாவித்திரி வித்யாலயா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரி, காமகோடி வித்யாலயா மற்றும் பெண்களுக்கான பத்மபூசன் ந.ராமசாமி அய்யர் நினைவு பல்தொழில்நுட்பப் பயிலகம் உட்பட 10000 மாணவர்களைக் கொண்ட கல்விக்குழுமமாக இப்பள்ளி வளர்ச்சியடைந்துள்ளது[3]. இவ்வனைத்து கல்வி நிறுவனங்களும் ந.ராமசாமி அய்யர் கல்வி வளாகம் என்ற 30 ஏக்கர் பரப்பளவிலுள்ள தொகுப்புக் கட்டிடத்திற்குள் இடம்பெற்றுள்ளன[4] . தொடக்கக் கல்வி முதல் முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் தொழில்சார் பாடங்கள் வரையிலும் இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்விக்கு இவர் ஆற்றியுள்ள அரும் பணியைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது[5]. 1976 ஆம் ஆண்டு 80 ஆவது வயதில் இவர் காலமானார்[1]. ராமசாமி அய்யரின் இளைய புதல்வர் பஞ்சாபகேசன் தன்னுடைய தந்தையின் முயற்சிகளை தனதாக்கிக் கொண்டு தற்பொழுது இக்கல்விக் குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்[4].

ந.இராமசாமி அய்யர்
N. Ramaswami Ayyar
பிறப்பு1896
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1976
பணிகல்வியாளர்
சமூக சீர்திருத்தவாதி
வழக்கறிஞர்
அறியப்படுவதுந.இராமசாமி அய்யர் கல்வி வளாகம்
பிள்ளைகள்இரா.பஞ்சாபகேசன்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Eight Decades of Empowering Women". Savitri Vidyasala Hindu Girls Higher Secondary School. 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016.
  2. "Seethalakshmi Ramaswami College Details". Global Shiksha. 2016. Archived from the original on ஏப்ரல் 10, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Secretary". S R College. 2016. Archived from the original on ஏப்ரல் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Lessons from father and son". The Hindu. 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் March 30, 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._இராமசாமி&oldid=3559803" இலிருந்து மீள்விக்கப்பட்டது