பஃகுடிங்கு
பஃகுடிங்கு (Phakding) ஊர் நேபாளத்தில் கும்புப்பகுதியில் இருக்கின்றது. இது இலுக்குலா ஊருக்கு வடக்கேயும், மாஞ்சோ ஊருக்குத் தெற்கேயும் 2,160 மீட்டர் உயரத்தில் தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1][2][3] இவ்வூர் 1979 ஆம் ஆண்டுமுதல் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களத்தில் ஒன்றாக விளங்குகின்றது.
இலுக்குலாவில் தொடங்கி வடக்கே செல்லும் கரட்டுப்பாதையில் பஃகுடிங்கே பெரும்பாலும் முதலில் நிற்கும் இடமாக இருக்கும். இப்பாதை எவரெசுட்டு அடிவார முகாமுக்குச் செல்லும் முக்கிய பாதையாகும்.[2]
இவ்வூரின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மலையேறு பயணிகளுக்கு தங்குமிடம் உணவகம் ஆகியவற்றின்வழி ஈட்டுவதே.[2]
இதனையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் பஃகுடிங்கு என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- ↑ [1] பரணிடப்பட்டது 2020-09-26 at the வந்தவழி இயந்திரம் Nepal Map Publisher Ltd.& பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9937-8062-1-3;
- ↑ 2.0 2.1 2.2 Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 ed.; p. 94 (map)+ pp 103-104; Lonely Planet; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781741041880
- ↑ Bezruchka Stephen; "Trekking in the Nepal: a traveler’s guide"; The Mountaineers ed.; Seattle; (2004); page 220; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-535-2