மாஞ்சோ என்பது நேபாளத்தில் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூர். இது தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில், பஃகுடிங்கு ஊருக்கு வடக்காகவும், சோர்சாலே ஊருக்குத் தெற்காகவும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 2835 மீட்டர் உயரத்தில் உள்ளது[1]. இவ்வூருக்குச் சற்று வடக்கே சாகர் மாதா தேசியப் பூங்காவின் தடுப்புக்காவல் நுழைவாயில் உள்ளது[2][3]. இவ்வூரும் 1979 முதல் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆக இருக்கின்றது.

எவரெசுட்டு மலைக்கோ அதன் அடிவார முகாமுக்கோ போகும் மலையேறிகளும் கரட்டு நடையாளர்களும் இலுக்குலாவில் தொடங்கி மாஞ்சோ வழியாக அங்கு நின்று செல்லும் இடமாகவுள்ளது.[2]

இவ்வூரின் முதன்மையான பயன் சுற்றுலாத் துறையில் மலையேறிகளுக்கும், மலைப்ப்பாதைவழி நடக்கும் கரட்டு நடையாளர்களுக்கும் உணவக வசதியும் தங்குவிடுதிகள் வசதியும் தருவதாகும்.[2]

இதனையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2020-09-26 at the வந்தவழி இயந்திரம் Nepal Map Publisher Ltd.& ISBN 978-9937-8062-1-3
  2. 2.0 2.1 2.2 Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 edição; p 94 (map)+ pp 103-104; Lonely Planet; ISBN 9781741041880
  3. Bezruchka Stephen; "Trekking in the Nepal: a traveler’s guide"; The Mountaineers ed.; Seattle; (2004); page 220; ISBN 0-89886-535-2

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஞ்சோ&oldid=3440155" இலிருந்து மீள்விக்கப்பட்டது