பகபன் சாகு
பகபன் சாகு (Bhagaban Sahu) இவர் ஓர் இந்திய நாட்டுப்புற நடனக் கலைஞரும், ஆசிரியரும் மற்றும் நடன இயக்குனருமாவார். ஒடிசாவின் நாட்டுப்புற நடன வடிவங்களை குறியீடாக்குவதில் இவர் பெயர் பெற்றவர். [1] இவர் 1914 செப்டம்பர் 21, அன்று இந்திய மாநிலமான ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். [2] பாரம்பரிய ஒடிசி நடன வடிவங்களான பாக் நாச் (புலி நடனம்), பொய்க்கால் நடனம், ஜோடி சங்கா, இலாடி, பைக்கா நடனம் மற்றும் சதியா சதானி போன்றவற்றை புதுப்பிப்பதற்கான முயற்சிகள் இவருக்கு கிடைத்தன. இந்த நடன வடிவங்களைப் பற்றி கிராம மக்களுக்கு கற்பித்த இவர் அவர்களுக்கு கலை குறித்து பயிற்சி அளித்தார். புத்ததேவ் தாசுகுப்தா இயக்கிய 1989 ஆம் ஆண்டு வங்காளத் திரைப்படமான பாக் பகதூரில் பிரபலமான புலி நடனக் காட்சியின் நடன இயக்குனராக இவர் இருந்தார்.
பகபன் சாகு | |
---|---|
பிறப்பு | இந்தியா |
இறப்பு | 12 ஆகத்து 2012 |
1992 ஆம் ஆண்டில் இந்திய அரசு குடிமகனின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது. [3] சாகுவின் வாழ்க்கை சுஜாதா பட்நாயக் எழுதிய போக் லெஜண்ட் பகபன் சாகு என்ற வாழ்க்கை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆகத்து 12 அன்று தனது 87ஆவது வயதில் இறந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "A Cultural Journey From 21-09-1914 to 12-08-2002". Ganjam. 2015. Archived from the original on மார்ச் 5, 2016. பார்க்கப்பட்ட நாள் October 20, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Odisha ignoring Sahu in his birth centenary year". The Hindu. 21 September 2011. பார்க்கப்பட்ட நாள் October 20, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
மேலும் படிக்க
தொகு- Sujata Patnaik (2006). Folk Legend Baghaban Sahu. Ministry of Information and Broadcasting. pp. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8123013426.