பகுப்பு பேச்சு:இந்து தீவிரவாதம்

"இந்து தீவிரவாதம்" இந்த பகுப்பு தேவையா? இந்து தீவிரவாதம், இசுலாம் தீவிரவாதம், கிருத்துவ தீவிரவாதம், பௌத்த தீவிரவாதம் என மதம் சார்ந்து பெயரிடல் தவிர்க்கப்படவேண்டும். தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசவேண்டாம். பகுப்பு கூடவே கூடாது --குறும்பன் 22:55, 6 டிசம்பர் 2009 (UTC)

நானும் உடன்படுகிறேன்.இந்த பகுப்பை தீவிரவாதம் என்று மட்டும் கொடுக்கலாம்.--மணியன் 08:56, 7 டிசம்பர் 2009 (UTC)
எனக்கும் உடன்பாடே. இங்குள்ளவற்றை தீவிரவாத தாக்குதல்கள் பகுப்பில் இடலாம்.--Kanags \பேச்சு 10:00, 7 டிசம்பர் 2009 (UTC)

தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசவேண்டாம்.நானும் உடன்படுகிறேன்.இந்த பகுப்பை தீவிரவாதம் என்று மட்டும் கொடுக்கலாம்.முஸ்லிம் பெயர்தாங்கிகள் குற்றம்சாட்டப்பட்டவை மாத்திரம் தீவிரவாத தாக்குதல்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ளது ஏன்?.கடந்த நான்காண்டுகளில் மட்டும் நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 2600 நபர்கள். ஆனால், இது இப்பட்டியலில் இடம்பெறவில்லை. சிரீபெரும்புதூரில் அந்நியர் நடத்திய தாக்குதல் இப்பட்டியலில் இடம்பெறவில்லையே ஏன் இந்தபாகுபாடு? ஆனால், கோவை குண்டுவெடிப்பில் எந்த வெளிநாட்டு சக்திகளுக்கும் தொடர்பில்லை என நீதிமன்றம் கூறியும் இது இப்பட்டியலில் இடம்பெற என்ன காரணம்? இரட்டிப்பு இருட்டிப்பு தயவு செய்து வேண்டாம்.--Hibayathullah 16:45, 7 டிசம்பர் 2009 (UTC)

தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசவேண்டாம் என்ற கருத்துக்கு உடன்பட்டதுக்கு நன்றி. Hibayathullah நீங்கள் தவி-க்கு புதியவர் இல்லை. இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தீவிரவாத தாக்குதல்கள் என்ற பகுப்பின் கீழ் வருகிறது. வெளிநாடு, உள்நாடு என்றெல்லாம் பாகுபாடு இல்லை. நக்சல்கள் தாக்குதல் குறித்து நீங்கள் விரிவாக எழுதலாம். தமுமுக சார்பு வேண்டாமே. பொதுவாக ஆதாரத்துடன் அவற்றை காட்டி எழுதுவோம். நன்றி --குறும்பன் 19:01, 7 டிசம்பர் 2009 (UTC)
இபாயத்துல்லா, பல கட்டுரைகள் தீவிரவாதத் தாக்குதல்கள் பகுப்பில் இடம்பெறாமைக்குக் காரணம் கட்டுரைகளை உருவாக்கியவர்கள் அந்தந்தப் பகுப்புக்குள் இடுவதற்கு மறப்பது அல்லது தெரியாமை போன்ற காரணங்களே ஒழிய வேறு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. தயவு செய்து நீங்கள் காணும் இப்படியான கட்டுரைகளை இப்பகுப்பினுள் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 20:25, 7 டிசம்பர் 2009 (UTC)
தமிழ்த் தீவரவாதிகள், அமெரிக்க தீவரவாதிகள் என்று எல்லாம் ஆ.வி பகுப்புக்கள் உள்ளன. எனவே சமயத்துக்கு என சிறப்புச் சலுகை தேவை இல்லை. இந்தப் பகுப்பு தகுந்ததே. --Natkeeran 23:54, 7 டிசம்பர் 2009 (UTC)

நட்கீரன் தவியில் அவை வேண்டாம். இது தேவையில்லாத மதம் குறித்த சர்ச்சைகளை உருவாக்கும். நமது வளம் சிதறடிக்கப்படும். காட்டாக கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை நான் இசுலாமிய தீவிரவாதம் என்பேன் இபாயத்துல்லா இந்து தீவிரவாதம் என்பார். இத்தகைய சிக்கல்கள் தேவையா? தீவிரவாதம் என்று சொன்னால் போதும். ஆ.வியில் தமிழ்த் தீவரவாதிகள் என்ற பகுப்பு இருப்பது போல் தெரியவில்லை. --குறும்பன் 03:07, 8 டிசம்பர் 2009 (UTC)

Start a discussion about பகுப்பு:இந்து தீவிரவாதம்

Start a discussion
Return to "இந்து தீவிரவாதம்" page.