பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப் பாடல்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
திரைப்படப் பாடல்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை குறித்த கருத்துகளை வரவேற்கிறேன். இது தமிழ் மட்டுமல்லாது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
என் பரிந்துரை:
- பாடல் ஏதேனும் ஒரு விருது பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, சிறந்த பாடல் வரிகளுக்கான விருது. அது தேசிய விருதாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வரப்படுகிற பிலிம்பேர் விருது போன்ற குறிப்பிடத்தக்க விருதாக இருந்தாலும் சரி.
- பாடித் திரிந்த பறவைகளே என்று ஒவ்வொரு கல்லூரியின் பிரிவுபசார விழாக்களில் பாடப்பட்டது போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் உடைய பாடல்கள். (இதனைத் தெளிவாக நிறுவுவது சற்று சிரமம் என்றாலும்)
- வொய் திஸ் கொலவெறி போல் பாடல் வெளிவந்த உடனே பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் ஒரு புதுப்போக்காவும் மாறும் பாடல்கள். இதற்கும் தெளிவான ஊடக ஆதாரங்கள் வேண்டும்.
குறிப்பிடத்தக்கமை வரையறுக்குள் வராத பாடல்கள் அவை இடம்பெற்ற திரைப்படங்கள் குறித்த கட்டுரையுடன் இணைக்கலாம்.
.--இரவி (பேச்சு) 11:04, 21 ஏப்ரல் 2014 (UTC)
- மாற்றுக் கருத்து ஏதும் இல்லையெனில், மே 23, 2014 முதல் மேற்கண்ட பரிந்துரை முறையான குறிப்பிடத்தக்கமை வரையறையாக அறிவிக்கப்படும்.--இரவி (பேச்சு) 12:26, 16 மே 2014 (UTC)
- ஆதரவு, குறிப்பிடத்தக்கமை வரையறுக்குள் வராத பாடல்களை அவை இடம்பெற்ற திரைப்படங்கள் குறித்த கட்டுரையுடன் இணைப்பதே பொருத்தமானது. இங்குள்ள கொள்கைகளையும் தமிழ் விக்கிச் சூழலுக்குப் பொருத்தமானவையெனில் உள்வாங்கலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:26, 26 மே 2014 (UTC)
குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:42, 15 சூன் 2014 (UTC)