பகுப்பு பேச்சு:தமிழ் முசுலிம்கள்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic குறிப்புகள்
- தமிழ் முசுலீம்கள் எனும் இந்தப் பகுப்பை தமிழ் இசுலாமியர்கள் எனும் பெயருக்கு மாற்றம் செய்யலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி. 17:11, 29 ஜூலை 2010 (UTC)
- தமிழ் இசுலாமியர்கள் என்பது தவறு.இசுலாம் என்பது சமயத்தின் பெயர்.அதை பின்பற்றுபவர்கள் முசுலீம் ஆவார்கள். இசுலாமியர் என்பதற்கு அரபியில் பொருள் இல்லை.--Hibayathullah 17:56, 29 ஜூலை 2010 (UTC)
- இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள், கிறித்துவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் கிறித்தவர்கள். பவுத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள் பவுத்தர்கள். இதுபோல் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள் என்பது சரியாகத்தானே இருக்கும். நாம் இங்கு இசுலாமியர் என்பதற்கு அரபியில் பொருள் காண்பதை விட தமிழில் பொருள் காண்பதே சிறப்பு. தமிழ்ப் புலமையுடையவர்கள் இதற்கு விளக்கமளிக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:40, 30 ஜூலை 2010 (UTC)
- தேனி சுப்பிரமணி கூறுவது சரி என்பது என் கருத்தும். இசுலாமியர் என்பது தமிழில் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர் என்று பொருள்படும். பிற வழக்கங்களையும் தேனி சு. எடுத்துக்காட்டியுள்ளார். முசுலீம், முசுலீம்கள் என்று இருப்பதுதான் சிறப்பு என்று இபயத்துல்லா விரும்பினால் அப்படி இருப்பதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால் அரபியில் பொருள் இல்லை என்பதை இங்கு தமிழில் எழுதும்பொழுது கூறுவது பொருந்தாது. அப்படிப்பார்த்தால் முசுலீம்கள் என்று -கள் விகுதி சேர்ப்பதுகூட அரபி மொழியில் அப்பொருள் தராதுதானே. எம்மொழியில் எழுதுகிறோமோ அம்மொழியின் வழக்கத்தின் படியே எழுதுதல் இயல்பு அல்லவா?--செல்வா 02:26, 30 ஜூலை 2010 (UTC)
- இஸ்லாம் எனும் ஓரிறைக் கொள்கையை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று உலகளவில் அழைக்கப்படுகின்றனர். ஆங்கில விக்கியின் படி one who submits (to God) is a muslim. முசுலீம் அல்ல முசுலிம் என்றே வழக்கத்தில் உள்ளது. - மாஹிர் 06:13, 30 ஜூலை 2010 (UTC)
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் (வெளியீடு: ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப., செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை -600 002. நாள்: 22-10-2009) எனும் கையேட்டில் ஆங்கில விளக்கத்தின் கீழ் 9 ஆம் பக்கத்தில் ஆங்கிலத்தில் (D) LIST OF BACKWARD CLASSES (MUSLIMS) எனும் தலைப்பில் 7 பிரிவு சாதிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தமிழ் விளக்கத்தின் கீழ் 23 ஆம் பக்கத்தில் தமிழில் (ஈ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முசுலீம் என்பதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் அரசின் பயன்பாட்டிலுள்ள இசுலாமியர் என்பதைப் பயன்படுத்துவதுதான் சரியானது என்று நான் கருதுகிறேன். இனியாவது பெயர் மாற்றம் செய்யலாமா? --தேனி.எம்.சுப்பிரமணி. 15:10, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முசுலிம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்கவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் --Hibayathullah 15:38, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- இசுலாமியர் என்பது சமயத்தை மட்டும் குறிக்கிறது. முசுலிம் என்பது பண்பாடு, மற்றும் பிற கூறுகளையும் சேர்த்துக் குறிக்கிறது. தமிழ்நாட்டிலும், இலங்கையில் முசுலிம் என்ற வழக்காடலே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே முசுலிம் என்றே கூறலாம் என்பது எனது கருத்து. பகுப்புப் பெயரின் எழுத்துக்கூட்டல் மாற்றப்படவேண்டும். --Natkeeran 16:47, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- நண்பர் ஹிபயதுல்லா, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் 13 பக்கக் கோப்பில் பல இடங்களில் இஸ்லாமியர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நான் முன்பு குறிப்பிட்ட செய்தியும் இதில் 12 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்தில் INSTRUCTION., ETC., TO CANDIDATES இடம் பெறும் போது Muslims என்று இடம் பெற்றுள்ளது. நக்கீரன் குறிப்பிடுவது போல் முசுலிம் என்பது வழக்கத்திலுள்ளதை நானும் அறிவேன். முசுலிம் என்று பேச்சு வழக்கத்தில் இருந்தாலும் இசுலாமியர் என்கிற அரசுப் பயன்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்துவதே பயனளிக்கும் என்பதால் மாற்றம் செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:24, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- இஸ்லாம்(கட்டுப்படுதல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமலிருப்பதும் தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்"(இசுலாம் விளக்கம் பார்க்க). இசுலாம் என்றால் கட்டுப்படுதல். இந்தக் கட்டுப்படுதல் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் இசுலாமிய சமயத்தவர். அப்படியானால் இசுலாமியர் என்பது சரிதானே? முஸ்லிம்கள் கட்டுரையில் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இசுலாமியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்று பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதே... எனக்கு இது குறித்த விபரம் தெரியாமையால்(புரிதலின்மையால்)தான் கேட்கிறேன். இது விவாதத்திற்காகவோ அல்லது சமய அடிப்படையிலான கருத்துக்களுக்கு மாற்றாகவோ கேட்கப்படவில்லை. எனக்கு சரியான விளக்கம் தர யாராவது முன் வர வேண்டும்.தவறாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:46, 6 செப்டெம்பர் 2010 (UTC)