பகுப்பு பேச்சு:தொன்மவியல் பாண்டியர்கள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

இவர்கள் எல்லோரையும் தொன்மம் என்று இறுதியாகக் கூற முடியாது. அவ்வாறு கூறுவது தவறு. --Natkeeran (பேச்சு) 15:59, 18 ஏப்ரல் 2012 (UTC)

இவற்றில் யார் யாரை நீக்க வேண்டும் மற்றும் அதன் காரணத்தைக் கூறினால் மாற்றி விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 18 ஏப்ரல் 2012 (UTC)

அதே சமயம் தொன்பியல் என்றுள்ள பகுப்புகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:07, 18 ஏப்ரல் 2012 (UTC)

தாமதமான பதிலுக்கு மன்னிக்க. உடனடியாக பகுத்துக் கூற முடியவில்லை. ஆனால் இதில் சில அரசர்களாவது வரலாற்று நபர்களாக இருந்திருப்பர் என்பது எனது ஊகம். --Natkeeran (பேச்சு) 03:09, 19 மே 2012 (UTC)Reply

//உடனடியாக பகுத்துக் கூற முடியவில்லை. ஆனால் இதில் சில அரசர்களாவது வரலாற்று நபர்களாக இருந்திருப்பர் என்பது எனது ஊகம்.//

எனக்கும் அதே பிரச்சினைதான். முதலில் இக்கட்டுரைகளை எழுதும் போது புராணப்பாண்டியர்கள், இலக்கியப் பாண்டியர்கள் என்றெல்லாம் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் யோசித்துப் பார்த்ததில் இதை எவற்றையும் இன்னும் ஆய்வாளர்கள் நிறுவ(மறுக்க)வில்லை என்பதால் பொதுவாக இருக்கட்டுமென இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன். கடைச்சங்ககாலப் பாண்டியர் பெயர்களான வழுதி, செழியன் போன்றவற்றிற்கு முறையே பெருவழுதி நாணயம் மற்றும் மாங்குளம் கல்வெட்டு இருப்பதால் அவர்களை இப்பகுப்பில் சேர்க்கவில்லை. இடைச்சங்க பாண்டியர்களான நெடியோனையும் குடுமியையும் தலையாலங்கானத்தை தலையலங்கோலமாக்கிய பாண்டியன் தன் பாட்டில் கூறியுள்ளதால் அவர்களையும் இப்பகுப்பில் சேர்க்கவில்லை. மற்ற இரண்டாம் சங்க பாண்டியர்களான வெண்டேர்ச் செழியன் காலத்தை இறையனார் அகப்பொருள் கொண்டு கணக்கிட்டால் கி.மு. 5300 வருகிறது. இதில் வரும் திருவிளையாடல் பாண்டியர்கள் காலமும் புராணப்படி கபாடபுரமான திரு ஆலவாய் (கபாடம் என்றால் வாயில் என்று பொருள்) காண்டத்துக்கு முன்னரே வந்து விடுகின்றனர். அதன்படி அவர்கள் இருந்தது உண்மையாக இருப்பினும் காலம் கி.மு. 5300 முன்னரே வரும். இதை எல்லாம் வரலாற்றாய்வாளர்கள் உண்மையென ஏற்குமளவுக்கு இன்னும் சான்றுகள் வெளியாகவில்லை. குலசேகர பாண்டியன் என்றவனே மதுரை கோவிலை கட்டினான் என்ற பழங்கதை இருந்தாலும் அது எந்த மதுரையில் (திருவிளையடல் படி அக்கதை வந்தது. அதன்படி இரண்டு கடல்கோள்கள் முதல் மதுரையிலும், நான்மாடக்கூடலிலும் வந்ததற்குப் பிறகே தற்போதைய மதுரை தலைநகராக ஆனதாக உள்ளது) என்பதும் வரலாற்றாலர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் இக்கட்டுரைகள் அனைத்தும் உங்களைப்போலவே எனக்கு ஊகங்களை மட்டுமே அளித்ததால் அனைத்தையும் தொன்பியல் என்று தாங்கள் அறியத்தந்த வார்த்தையிலேயே சேர்த்துவிட்டேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:16, 19 மே 2012 (UTC)Reply

  • தொன்மைக் கதை இத்தலைப்பில் தொன்மம் என்னும் சொல்லால் சுட்டப்பட்டுத் தொன்மவியல் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 07:08, 8 சூலை 2013 (UTC)Reply
Return to "தொன்மவியல் பாண்டியர்கள்" page.