பகுப்பு பேச்சு:போலி வரலாறு
போலி வரலாறு என்றால் போலி என நிருபனப்படுத்தியிருக்க வேண்ரும். உதாரனத்திற்கு உலகம் தட்டையென கூறியது போலி என நிரூபனப் படுத்தப்பட்டுவிட்டது. மேலும் நீங்கள் கேட்ட குமரிக்கண்டம் போன்ற கட்டுரைகள் போலி என நிறுவுவதற்கு ஏதும் சான்றில்லை. en:Category:Pseudohistory ஆங்கிலப்பகுப்பிலும் அக்கட்டுரைகள் இல்லை.
என்னைப் பொருத்தவறை போலி வரலாறு என்று நீங்கள் குறிப்பிட்டதில் ஐந்திறம் கட்டுரையை அடக்கலாம். ஏனென்றால் அதை எதிர்த்து கேட்டவை எவற்றுக்கும் தகுந்த பதில்கள் ஏதும் அழிக்கப்பட்டதாக எனக்குத்தெரியவில்லை. குமரிக்கண்டம் போன்ற கட்டுரைகள் ஏற்கனவே தொன்மவியல் கண்டங்கள் பகுப்பில் உள்ளன. தொன்மவியல் என்பதிலேயே அங்கு இருந்ததாக ஒரு சமூகத்தாரல் கருதப்படும் என்ற அர்த்தம் அடங்கிவிட்டது. மயன் பற்றியும் சாஸ்திரங்கள் சங்கப்பாடல்கள் பல உள்ளன. அதனால் மயனும் தொன்மவியலிலேயே அடக்கப்படுவார். இது என் கருத்தே. மேலும் இவை போன்ற கட்டுரைகளில் அனுபவமுள்ள நற்கீரன் போன்றவர்களின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக பொய் என்று வரலாற்றுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை எவையேனும் தொன்மவியல் பகுப்புகளில் இருந்தால் அதை போலி வரலாற்றிலும் சேர்க்கலாம் என்பது என் கருத்து. மூ பற்றி தெளிவான வரையரை எனக்கில்லை. ஆங்கிலத்தில் கேட்டுப்பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:39, 2 மே 2012 (UTC)
சுப்பிரமணியன், en:Category:Pseudohistory பகுப்பில் குமரிக்கண்டம் சேர்க்கப்படாததால் தான் நான் தங்கள் கருத்தைக் கேட்டேன். அங்கே இலெமூரியாவிற்குப் போலித்தொல்லியல் எனும் பகுப்பளித்திருக்கிறார்கள். குமரிக்கண்டம் பொய் என்று சொல்வது பலரது உணர்வுகளைப் பாதிக்கக் கூடிய ஒன்றாகையால் பொறுமையாகவே செயல்படலாம். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:05, 2 மே 2012 (UTC)
எனக்கொரு ஐயம் நிறுவப்படாதவை எல்லாம் போலி வரலாற்றில் தான் இருக்க வேண்டுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:16, 2 மே 2012 (UTC)